தீபாவளி பட்சணங்கள் செய்ய உதவும் சமையல் குறிப்புகள்..!

deepavali patchanam tips
தீபாவளி பட்டணங்கள்Image credit - youtube.com
Published on

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். தூள் பக்கோடா செய்யும் போது கடலை மாவுடன் சிறிது ரவையையும் சேர்த்து கலந்து பக்கோடா செய்து பாருங்கள். பக்கோடா மொறுமொறுவென இருப்பதோடு சுவையும் கூடுதலாக இருக்கும்.

ளுந்துவடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். வடை செய்யும் போது ஒரு ஸ்பூன் ரவையை கலந்து செய்தாலும் மொற மொறப்பாக இருக்கும். வடை மாவில் தண்ணீர் அதிகப்பட்டுவிட்டால் அதில் சிறிதளவு நெய் சேருங்கள். மாவு இறுகிவிடும்.

மைசூர்பாகுகிற்காக கடலைமாவு எடுத்துக் கொள்ளும்போது அதனுடன் சிறிது வறுத்து அரைத்த முந்திரிப்பருப்பையும் கலந்து செய்தால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

திரசம் செய்யும்போது மிதமான தீயில் பொரித்து எடுத்தால் மட்டுமே அதிரசத்தின் உள்ளேயும் நன்றாக வெந்து வரும். இவ்வாறு செய்யும் போது மிகவும் மென்மையான அதிரசம் கிடைக்கும். அதிரசம் செய்த பிறகு கெட்டியாக இருந்தால் இட்லி குக்கரில் வைத்து ஆவியில் லேசாக வேகவைத்து எடுத்தால் அதிரசம் மென்மையாகிவிடும்.

னிப்பு பலகாரத்துக்கு பாகு செய்யும்போது பாகு கொதிக்கையில் சில சொட்டு பால் விட்டால் அழுக்கு தனியாக பிரிந்துவிடும். பலகாரங்கள் செய்ய வாணலியை சூடாக்கிய பின்பே அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எண்ணெய் சூடாக அதிக நேரம் பிடிக்கும்.

பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து விட்டால் சோறு தனித்தனியாக இருக்கும்.

மாவினால் செய்யும் அனைத்து பலகாரங்களுக்கும் மாவை வறுத்து செய்தால் கட்டி சேராது. ஜாங்கிரி செய்த பிறகு அதன் மீது வண்ண தேங்காய்ப் பூ துருவலை தூவி, பிறகு கொடுத்தால் வித்தியாசமான சுவையும், பார்க்க அழகாகவும் இருக்கும்.

குளோப்ஜாமுன் மாவு எவ்வளவோ அதே அளவு பாலில் கேசரி பவுடர் கலந்து கரைத்துக் கொண்டு இரண்டு பங்கு சர்க்கரை, மூன்று பங்கு நெய் என்ற விகிதத்தில் கலந்து அல்வா செய்தால் சூப்பர் ருசியுடன் இருக்கும். முந்திரியை நெய்யில் பொரித்து கொட்டி இறக்க வேண்டும்.

கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம். தேங்காய் பர்பி செய்யும்போது சிறிது முந்திரி பருப்பு பாதாம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

பாதுஷா செய்த பின்பு அதன் மீது பூஸ்டை திக்காக கரைத்து பாதுஷாவின் மீது ஆங்காங்கே கைகளால் தெளித்தால் வித்தியாசமான டிசைனில் பாதுஷா இருக்கும்.

இதையும் படியுங்கள்:
திரட்டுப்பால் - பொட்டுக்கடலை முறுக்கு செய்து அசத்துங்களேன்!
deepavali patchanam tips

மிளகாய் பஜ்ஜி தயாரிப்பதற்கு முன் மிளகாய்யை சீவி கிறி எண்ணெயில் வதக்கி விட்டு பிறகு மிளகாய்யை பஜ்ஜி செய்தால் மிளகாயின் காரத்தன்மை குறைந்துவிடும். ஒரு கரண்டி நெய்யை பஜ்ஜி மாவில் கலந்து சுட்டால் பஜ்ஜி சுவையாக இருக்கும்.

பூந்தி செய்த பிறகு பூந்தியில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், பச்சகற்பூரம் சேர்த்து நன்கு கலக்கவும், பின் சூடான சர்க்கரை பாகு சேர்த்து நன்கு கலக்கவும். ஐந்து நிமிடம் கழித்து நன்றாக ஊறினால், இனிப்பு பூந்தி தயார் உடனே பரிமாறலாம்.

ஓமப்பொடிக்கு ஓமந்தை சேர்ப்பதை விட 10 ஓமவல்லி இலைகளை அரை டம்ளர் தண்ணீரில் அரைத்து வடிகட்டி மாவில் சேர்த்துச் செய்து பாருங்கள் விறுவிறுப்பான சுவையுடன் இருக்கும்.

அவல் உப்புமா, அவல் பாயசம் செய்யும்போது, அவலை மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக செய்து விட்டு உப்புமா, உசிலி போன்றவைகளை செய்தால் பொல பொல என்று பார்க்கவே அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com