நம் உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவையான நுண்ணுயிர்ச் சத்துக்களைப்பெற நாம் பல வகையான காய்கறிகளையும் பழங்களையும் உட்கொண்டு வருகிறோம். அவற்றுள் ஒரு காய்தான் மஞ்சள் பூசணி (Yellow Pumpkin). இக்காயை உபயோகித்து கூட்டு, பொரியல், குழம்பு என பல வகையான உணவுகளைத் தயாரித்து உட்கொள்ளலாம். இங்கு நாம் மஞ்சள் பூசணிக்காயை உபயோகித்து ஒரு சுவையான சூப் தயாரிப்பது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் பூசணி சூப்
தேவையான பொருள்கள்:
நறுக்கிய பூசணி துண்டுகள் 3 கப்
ஆலிவ் ஆயில் 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் 1 (நறுக்கி கொள்ளவும்)
உரித்த பூண்டு 4 பல்
இஞ்சி 1 அங்குல துண்டு
பட்டை 1 அங்குல துண்டு
க்ரீம் 1 கப்
லவங்கம் 2
ஜாதிக்காய் பவுடர் 1 சிட்டிகை
உப்பு, மிளகுத் தூள் தேவையான அளவு
சிவப்பு மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
பட்டர் 2 டீஸ்பூன்
தாமரை மொக்கு (Anise), பட்டை, லவங்கம், பெருஞ்சீரகம்
சிச்சுவான் பெப்பர் கார்ன் ஆகிய ஐந்து ஸ்பைஸஸ் சேர்த்து அரைத்த பவுடர் - 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தழை அலங்கரிக்க.
செய்முறை:
பூசணி துண்டுகளுடன் இஞ்சியை நறுக்கி சேர்த்து மிக்ஸியில் மசிய அரைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடாக்கவும்.
அதில் பட்டை லவங்கம் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்ததும் அரைத்த பூசணி பேஸ்ட்டை அதில் கொட்டி, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சூப் கொஞ்சம் திக்காகி வரும்போது பாதி அளவு க்ரீம் சேர்த்து ஸ்பைஸஸ் பவுடரை சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு மீதி க்ரீம் மற்றும் உப்பு மிளகு தூள்கள் சேர்க்கவும். சரியான நிலைக்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பட்டர், மல்லிதழை சேர்த்து சூடாக குடிக்கவும்.
மஞ்சள் பூசணி சூப் ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும்; அதிகப்படி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்;
இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும். இதிலுள்ள வைட்டமின் C செல்களைப் பாதுகாக்கும்; திசுக்கள் சேதமடையாமல் இருக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும் உதவும். இத்தனை நன்மைகள் தரும் மஞ்சள் பூசணி சூப்பை அடிக்கடி அருந்தி ஆரோக்கியம் காப்போம்.