பாசிப்பருப்பு புட்டும் கொண்டைக்கடலை வடையும் செய்யலாம் வாருங்கள்!

healthy samayal tips
Puttu - Vadai recipes..Image credit - youtube.com
Published on

ம் பாரம்பரிய புட்டு வகைகள் இப்போது அவ்வளவாக செய்யப்படுவதில்லை. நம் பாட்டி அம்மா போன்றவர்கள் பக்குவமாக செய்து கொடுத்த உடலுக்கு ஆரோக்கியம் தரும் புட்டுகள். சிறிது மெனக்கெட்டால் சத்துள்ள புட்டு வகைகளை செய்து அசத்தலாம். பாசிப்பருப்பு கொண்டு செய்யப்படும் புட்டு மிகவும் ருசியானது மட்டுமல்ல சத்தும் நிறைந்தது.

பாசிப்பருப்பு புட்டு:

பயத்தம் பருப்பு 2 கப் 

கடலைப்பருப்பு 1/4 கப்

தேங்காய்த் துருவல் 4 ஸ்பூன்

நாட்டு சக்கரை தேவையானது

ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்

உப்பு ஒரு சிமிட்டு

நெய் 2 ஸ்பூன்

பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் தண்ணீர்விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நன்கு களைந்து தண்ணீரை சுத்தமாக வடிகட்டிக் கொள்ளவும். மிக்ஸி அல்லது கிரைண்டரில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைக்கவும். நிறைய தண்ணீர் விட்டு அரைக்கக் கூடாது. அத்துடன் விழுதாக அரைக்காமல் ரவை பதத்திற்கு மாவை அரைத்து எடுக்கவும். அப்பொழுதுதான் புட்டு சரியான பதத்தில் கிடைக்கும்.

அரைத்தமாவில் ஒரு சிமிட்டு உப்பு சேர்த்துக் கலந்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். நன்கு வெந்ததும் (ஸ்பூனின் பின்புறம் வைத்து குத்திப் பார்க்க ஸ்பூனில் மாவு ஒட்டாமல் வரும்) வெந்த மாவை எடுத்து தட்டில் வைத்து ஆற விடவும். நன்கு ஆறியதும் கையால் சிறிது உடைத்து விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று ஓட விட்டால் பொல பொலவென உதிர்ந்து விடும்.  

இதையும் படியுங்கள்:
கறிவேப்பிலை சேர்த்து தோசை உண்பது எவ்வளவு ஆரோக்கியம் தரும் தெரியுமா?
healthy samayal tips

நெய்யில் முந்திரி, தேங்காய்த் துருவலை வறுத்து தயாராக உள்ள புட்டு மாவை வாணலியில் போட்டு ஒருமுறை கலந்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும். வாணலியில் இருக்கும் சூட்டிலேயே புட்டுக்கு தேவையான நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரையைக் கலந்து அரை ஸ்பூன் ஏலக்காய் பொடியையும் தூவிவிட மிகவும் ருசியான பாசிப்பருப்பு புட்டு தயார்.

இதனை நவராத்திரி காலங்களில் அம்பாளுக்கு நிவேதனம் செய்ய மிகவும் விசேஷம்.

கொண்டைக்கடலை வடை:

கொண்டை கடலை 200 கிராம் 

மிளகாய் வற்றல் 6 

உப்பு தேவையானது 

பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்

கருவேப்பிலை சிறிது 

எண்ணெய் பொரிக்க

இந்த வடை எண்ணெய் குடிக்காது. செய்வதும் ரொம்ப சுலபம். வெள்ளை கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊறவிடவும். காலையில் அதனைக் களைந்து உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதில் பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்துக் கலந்து விடவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடானதும் வடைகளாக தட்டிப்போட்டு பொரித்தெடுக்கவும். மிகவும் ருசியான சத்தான வடை தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com