மணக்க மணக்க மாம்பழ தோசை செய்வது எப்படி தெரியுமா?

மாம்பழ தோசை ...
மாம்பழ தோசை ...Image credit - youtube.com

மாம்பழம் வர ஆரம்பித்துவிட்டது. மாம்பழ சீசனில் மறக்காமல் இந்த தோசையை செய்து நம் குழந்தை களுக்கு கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமல்ல வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான இந்த மாம்பழ தோசைக்கு உளுந்து தேவையில்லை. மணக்க மணக்க மாம்பழ தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாம்பழம் 2 சிறியது

இட்லி அரிசி 1/4 கிலோ 

பச்சை மிளகாய் 2 

சீரகம் ஒரு ஸ்பூன் 

வெண்ணெய் (அ) நெய் 2 ஸ்பூன் 

உப்பு சிறிது

அரிசியை நன்கு களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டங்களாக நறுக்கி அரிசி பாதி அரைந்ததும் அதனுடன் பச்சை மிளகாய், சீரகம், மாம்பழத் துண்டுகள் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும். இதனை ஒரு மணி நேரம் புளிக்க விட்டு தோசை வார்க்க மிகவும் சுவையான தோசை தயார்.

பரிமாறும் சமயம் மாம்பழ தோசையில் வெண்ணெய் தடவி பிடித்த சட்னியுடன் பரிமாற  நிமிடத்தில் காலியாகி விடும்.

சத்து மிகுந்த தினை மாவு லட்டு!

தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தமிழ் கடவுள் முருகன் வள்ளியை திருமணம் செய்வதற்காக வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும் பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் கதைகள் கூறப்படுகின்றன. 

தினை மாவு லட்டு
தினை மாவு லட்டுImage credit - youtube.com

தேனும் தினை மாவும் லட்டு:

தினை‌. 1 கப்

தேன் 4 ஸ்பூன் 

ஏல பொடி 1/2 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு 10 

நெய் 2 ஸ்பூன்

தினையை நன்கு நீரில் நனைத்து இரண்டு மூன்று முறை களைய வேண்டும். இதில் நிறைய தூசு, அழுக்குகள் இருக்கும். எனவே நன்கு களைந்து நீரை வடிகட்டி ஒரு காட்டன் துணியில் பரத்தி உலர விடவும். பிறகு வாணலியில் போட்டு நன்கு சூடு வர வறுத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் மிக்ஸியில் நைஸ் பொடியாக அரைத்து எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி தேன் நான்கு ஸ்பூன், ஏலப்பொடி அரை ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பு துண்டுகள் எல்லாம் சேர்த்து உருண்டைகளாக பிடிக்க ருசியான, சத்தான தேனும் தினை மாவும் லட்டு தயார்.

இதையும் படியுங்கள்:
பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் தோசை சாப்பிட்டு இருக்கீங்களா?
மாம்பழ தோசை ...

தினையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ள இது கொழுப்பின் அளவை குறைக்க வெகுவாக உதவுவதால் எந்த ஒரு டயட் முறையிலும் தினையை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com