ஜிலேபி உருவான வரலாறு தெரியுமா?

Tasty jalebi recipe...
jilebi sweetsImage credit - youtube.com
Published on

ஜீராவில்  ஊறி மிதக்கும் ஜிலேபியை  பார்க்கும்போதே நாவில் நீர் ஊறும். அரேபிய மொழியில்  'ஜீலேபியா ' என்ற வார்த்தையிலிருந்துதான் 'ஜிலேபி ' என்ற வார்த்தை உருவானது. வியாபாரத்திற்காக இந்தியா வந்த பாரசீகர்கள் நமக்கு அளித்த பரிசுதான் 'ஜிலேபி' எனப் பெயர் பெற்றது.

ஜிலேபி வந்த பரிணாமம்

500 ஆண்டுகள்  பழமையான இனிப்பாக 'ஜிலேபியை' பலர் கூறுகின்றனர். பொதுவாக இந்தியாவில் மைதா மாவில் செய்யப்படும் ஜிலேபிகள்தான் அதிகம்.

எனினும் மக்களுக்கு ஏற்றவாறு ஊர்களுக்கு ஏற்ப உளுந்து, அரிசி, கோதுமை மாவில் செய்து தயாரிக்கும் முறைகள் வந்துவிட்டது.

ஜிலேபியின் பல பெயர்கள்

மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ப  பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. ஜிலேபி, ஜில்ப்பி, ஜிலப்பி, ஜிலேப்பி, ஜில பிர் பாக். இம்ரதி, ஜாங்கிரி போன்ற பெயர்கள் உள்ளன.

ஜிலேபியின் தலைநகர்.

இந்தியாவில் இனிப்புகளின் நகரமாக கொல்கத்தாவாக இருந்தாலும், ஜிலேபி என்றால் அது டெல்லிதான். டெல்லியில் சாலையோரக்கடை முதல் ஏசி உணவகங்கள் வரை ஜிலேபி எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

உலகளவிலும் ஜிலேபி

மேற்கு ஆசியாவிலிருந்து இந்தியா வந்த ஜிலேபி, வட ஆப்ரிக்கா, கிழக்கு ஆப்ரிக்காவிலும், பிரபல இனிப்பு உணவாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
புரூனில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Tasty jalebi recipe...

வரலாற்று ஆய்வாளர்களிடம் கிடைத்த 10ம் நூற்றாண்டு 13ம் நூற்றாண்டுகளை சேர்ந்த குறிப்புகளில் ஜிலேபியின் செய்முறை வடிவம் உள்ளது. அப்போதே பழங்கால மக்கள் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜிலேபி செய்யும் முறை

மைதா மாவில் நீர்விட்டு குழைவாக  மாவாக்கி காய்ந்த எண்ணெயில் துணியில் ஓட்டை போட்டு வட்ட வடிவில் பிழிந்து பொரித்து எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்துவிட்டால் ஜிலேபி ரெடி. இதை  சூடாகவும், ஆறிய பின்னும் சாப்பிடலாம். இதில் எலுமிச்சைசாறு அல்லது பன்னீர் சேர்த்து சாப்பிட  சுவை அசத்தலாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com