புரூனில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

prune fruit
prune fruithttps://www.healthline.com
Published on

புரூன் (Prune) என்பது ஊட்டச்சத்து நிறைந்த ஓர் உலர் பழம். பல வெரைட்டிகளைச் சேர்ந்த பிளம்ஸ் பழங்களை உலரச் செய்து தயாரிக்கப்படுவது புரூன். இது சமையலிலும் மருத்துவத் தயாரிப்புகளிலும், இனிப்பு மற்றும் கார வகை ஸ்நாக்ஸ்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால் டயாபெட்டிக் பேஷண்ட்களும் உண்ண ஏற்றது. பிளம்ஸ் பழங்களில் உள்ள சத்துக்களோடு ஒப்பிடுகையில் புரூனில் சத்துக்கள் அதிகம். புரூனில்  நீர்ச்சத்து குறைவாக உள்ளதால் கார்போஹைட்ரேட்ஸ், மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு, புரோட்டீன், நார்ச்சத்து, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு போன்ற சத்துக்கள் அதிகம். புரூனிலிருந்து நம் உடலுக்குக் கிடைக்கும் அதிசயிக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

புரூனில் இருக்கும் ஊட்டச் சத்துக்களின் கலவையானது ஒரே நேரத்தில் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் ஆரோக்கியத்தையும் மேன்மையுறச் செய்யும். இதில் அதிகளவில் நிறைந்துள்ள வைட்டமின் K, கால்சியம், பொட்டாசியம், பாலிபினால்ஸ் மற்றும் குறைவான கொழுப்பு போன்றவை நீரிழிவை குணப்படுத்தவும் இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைக்கவும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும். மேலும் இதயம், மூளை மற்றும் செரிமான உறுப்புகள் சிறப்பாக இயங்கவும் உதவி புரியும்.

மெனோபாஸ் காலத்தை கடந்துவிட்ட பெண்கள், பின்வரும் காலங்களில் அவர்களின் தினசரி உணவில் சுமார் ஐம்பது கிராம் புரூன் சேர்த்து உட்கொண்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு, ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் வீக்கங்கள் குறையும். இதய நோய்கள் உண்டாகும் வாய்ப்பும் குறையும். ஒரு வருடம் தொடர்ந்து இவ்வாறு புரூன் உட்கொண்டு வந்த பெண்களின் மெட்டபாலிக் செயல்பாடுகளில் எந்த விதமான எதிர்மறை விளைவுகளும் உண்டாகவில்லை. அதோடு, அவர்களின் இடுப்பு சதையும் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அல்சரை போக்க எளிய வழிமுறைகள்!
prune fruit

புரூன் மூளை மூப்படைவதைத் தடுத்து நிறுத்தும். புத்திக் கூர்மையையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். பொட்டாசியம், காப்பர், நுண்ணுயிர்ச் சத்துக்கள், வைட்டமின் B6 ஆகிய முக்கிய ஊட்டச் சத்துக்களின் 'ஸ்டோர் ஹவுஸ்'ஸாகத் திகழும் புரூன், நரம்பு மண்டல இயக்கங்கள் சிறப்பாக நடைபெறவும் உதவி புரியும். புரூன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் நிறைந்தது. குறிப்பாக, அந்தோசியானின் என்னும் ஊதா கலர் தாவர நிறமி அதிகம் கொண்டது புரூன்.

தினசரி ஐம்பது கிராம் புரூன் உட்கொள்ளும் பெண்களின் எலும்புகளுக்குள்ளிருக்கும் கனிமச் சத்துக்களின் அளவு குறையாமலும், எலும்புகள் ஆரோக்கியம் நிறைந்ததாக உள்ளதாகவும் ஆராய்சிகள் வெளியிட்டுள்ள குறிப்புகள் கூறுகின்றன. எனவே, புரூன் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. புரூனில் உள்ள அதிகளவு நார்சத்துக்கள் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் மற்றும் வயிற்றில் உள்ள நல்ல பாக்ட்டீரியாக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதன் தொடர்ச்சியாய் மூளை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேன்மையுறும்.

இத்தனை நன்மைகள் தரக்கூடிய புரூனை அனைவரும் தினசரி உணவில் சேர்த்து உட்கொண்டு பல நன்மைகள் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com