தூத்துக்குடி மக்ரூன் வந்த வரலாறு தெரியுமா?

Do you know the history of Tuticorin Makroon?
macaroon sweet
Published on

ப்பு என்றாலே நாம் எல்லோருக்கும் ஞாபகம் வருவது தூத்துக்குடிதான். ஆனால் பிரபலமான இனிப்பு பண்டம் இங்கே தயாரிக்கப்படுகிறது. அதுதான் மக்ரூன். மிகவும் சுவையான  தரமான தூத்துக்குடியில் மட்டும்தான் ஒரிஜினலாக கிடைக்கும்.

மக்ரூன் வந்த வரலாறு;

போர்த்துக்கீசியர்கள் நம் இந்தியாவில் அமைந்துள்ள கடல் கடந்த மாவட்டங்களையே ஆண்டு வந்தனர். அவர்கள் வந்ததும், அவர்கள் பழக்க வழக்கங்கள், சமையல் நுணுக்கங்கள் யாவையும் சேர்த்து நம் கடலோர மண்ணுக்கு தாரைவார்த்து கொடுத்தனர். அவற்றில் ஒன்றுதான்  இந்த மக்ரூன் எனும் சுவையான இனிப்பு பண்டம்.

மக்ரூன் என்பது என்ன?

மக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசிய சொல். அதன் அர்த்தம். 'முந்திரியும்  முட்டையும் கலந்த இனிப்பு' தூத்துக்குடியை ஆண்டு வந்த போர்த்துக்கீசிய மன்னர்கள் பிரேசில் நாட்டின் வட கிழக்குப் பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிக் கொட்டைகளை கொண்டு வந்து 'மக்ரூன்' செய்து சாப்பிட்டார்கள். இந்த முந்திரிக் கொட்டையை தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் 'கொல்லாக் கொட்டை ' என்றும் அழைப்பார்கள்.

மக்ரூன் செய்வது எப்படி?

தேவையானது;

1கிலோ மக்ரூன் செய்ய மட்டுமே

சர்க்கரை - 1 கிலோ

முந்திரி - அரை கிலோ

முட்டை – (நாட்டுக்கோழி) - 15

செய்முறை:

முதலில் முந்திரி, சர்க்கரை சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். முட்டை வெள்ளைக் கருவை தனியாக எடுத்து அதை நன்றாக அடித்துக் கொண்டு, இரண்டையும் நன்றாக கலந்த இக்கலவைதான் , 'மக்ரூன்.'

இதையும் படியுங்கள்:
மைதா பரோட்டாவும், வெஜிடபிள் குருமாவும்!
Do you know the history of Tuticorin Makroon?

இதனை அடிக்க அடிக்க குப்பென மேல் எழுந்து நுரை ததும்பும். சர்க்கரையை கொட்டி, திரும்பவும் அடித்து, முந்திரிப் பவுடரை சேர்த்து மிதமான பதத்தில் பிசையவும். ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல கட்டி அதற்குள் மாவை, வைத்து பேப்பர் கீழ் ஓட்டை வழியாக மாவால் கோலம் மாதிரி சுருள் வடிவத்தில் கீழே பரவும்.

மாவு வடிவம் கிடைத்ததும் பேக்கரி அடுப்பின் மேல்தளத்தில்  மிதமான சூட்டில் மக்ரூன் தட்டுகளை அடுக்கி காயவைத்து இரவு முழுவதும் காய்ந்தால் 'மக்ரூன்' ரெடி

உலகில் பலவகை மக்ரூன்கள் இருந்தாலும் தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் மக்ரூனில்தான் சுவை, மணம், சுகாதாரம் இருக்கும். உலகம் முழுவதும் இங்கு இருந்துதான் ஏற்றுமதி ஆகிறது. ஒரு தடவை சாப்பிட முந்திரியின் சுவை நாவில் நீர் ஊறவைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com