ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உருவான கதை தெரியுமா?

 story of Srivilliputhur Palkova.
Do you know the story of Srivilliputhur Palkova?Image Credits: YouTube
Published on

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் பால்கோவாவும் ஒன்றாகும். இது பால் மற்றும் சர்க்கரையை வைத்து செய்யப்படும் எளிமையான இனிப்பாகும். பால்கோவா முதன்முதலில் தமிழ்நாட்டில் தான் உருவானது என்று சொல்லப்படுகிறது. பால்கோவா என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாதான். அத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உருவான கதையை இப்பதிவில் விரிவாகக் காண்போம்.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிறந்த இடமாக கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊர் பால்கோவா தயாரிப்பிற்கும் பெயர் போன இடமாகும்.

இந்த ஸ்ரீவில்லபுத்தூர் பால்கோவா 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் 1920 ல் தேவ் சிங் என்ற வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் லாலா ஸ்வீட் ஸ்டால் என்று ஆண்டாள் கோவிலுக்கு மிகவும் அருகாமையிலேயே தன்னுடைய கடையை நிறுவி இந்த பால்கோவாவை பெறுமளவில் விற்பனை செய்ய தொடங்கினார். பிறகு இந்த கடை வெங்கடேஷ்வரா விலாஸாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிகமாக பால் கிடைப்பதால், இங்கு பால்கோவா பிரபலமானதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு நாள் காலையிலும் பாலை மொத்தமாக கொள்முதல் செய்து தரத்தை மற்றும் கொழுப்பின் அளவை பரிசோதித்த பிறகு அதிக அளவிலான பாலை நன்றாக கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சிய பிறகு சர்க்கரையை சேர்த்து பால்கோவாவை தயாரிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நாவூர வைக்கும் ‘பிஸிபேளாபாத்’ உருவான கதை தெரியுமா?
 story of Srivilliputhur Palkova.

புளியமரத்தடி பால்கோவா கடையும் இங்கு பிரபலமாகும். இந்த புளியமரத்தடி பால்கோவா கடை 1960 களில் இருந்தே தரமான பால்கோவாவை செய்து மக்களுக்கு வழங்குகிறது. இந்த கடை கிருஷ்ணா சிங் என்பவரால் நிறுவப்பட்டது. புளியமரத்தடி அருகிலே அமைந்திருப்பதால், இப்பெயர் பெற்றது.

இதுமட்டுமில்லாமல் 1970 களில் கூட்டுறவு பால்சங்க வணிகர்கள் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் தயாரிப்பு மற்றும் வணிகத்தை ரொம்பவே அதிகப்படுத்தியிருக்கிறார்கள். இதனால்  ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு 2019 ல் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த பால்கோவாவின் புராணக்கால வரலாறு என்னவென்றால், இங்கு ஆண்டாள் தாயாருக்கு படைக்கப்படும் ‘திரட்டு பால்’ என்ற பிரசாதத்திலிருந்து இந்த உணவுப்பொருள் மருவி வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com