சுவையைக் கூட்டும் சூட்சுமங்கள் தெரியுமா உங்களுக்கு?

healthy recipes
Samayal tips...Image credit - pixabay
Published on

ருக்கு அழகூட்டுபவை  ஆறு. நாவிற்கு சுவையூட்டுபவை ருசிகள். சாதாரண சமையலை வியக்கும் வண்ணம் சமைக்க  உதவிபுரிவது அதன் டிப்ஸே. சாதாரணமாக வீட்டில் மீந்து போகும் ஒரு பதார்த்தத்தை எப்படி மாற்றி அமைத்து சுவை கூட்டி சமாளிக்கலாம் என்பதற்கான ஐடியாக்கள் இதோ. 

ப்பொழுதெல்லாம் சாதத்தை பாத்திரத்தில் வடிக்கிறோம். அதை வடித்து முடித்தவுடன் சில நிமிடம் ஸ்டவ்வில் தீயில் வைத்து எடுத்தால் அதன் தண்ணீர் நன்றாக வடிந்து, நீர் கோர்த்து கெட்டுப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும். 

கோதுமையை அரைக்கும் முன்பு கோதுமையை நன்றாக கழுவி ஊறவைத்து, நன்றாக காயவைத்து அரைத்தால் அதில் சப்பாத்தி, பூரி மற்றும் எந்த பதார்த்தங்கள் செய்தாலும் மிருதுவாக இருக்கும். 

தேபோல் காலையில் வைத்த குழம்பு வகைகளை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சூடுபடுத்தும்போது நன்றாக கொதிக்கவிட்டு சாப்பிட வேண்டும். அரைகுறையாக சூடு படுத்தி சாப்பிடுவது நல்லது அல்ல. 

வெங்காயத்தாள் அதிகமாக இருந்தால் அதனுடன் முட்டைக்கோஸ், கோவைக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை ஒரே சீராக நறுக்கிச் சேர்த்து அதனுடன் மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு கடலை மாவு, வினிகர் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து அந்த மாவை கொதிக்கும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்து எடுத்தால் கலர் பக்கோடா அசத்தலாக இருக்கும். கலவை சாதங்களுக்கு தொடுகறியாக பயன்படுத்தலாம்.

ரண்டு மூன்று காய்கள் சேர்த்து செய்த பொரியல் மீந்துவிட்டால் அவற்றை நன்றாக வதக்கி கடலை மாவில் தோய்த்து போண்டாக்களாக உருவாக்கி கொடுக்கலாம். குழந்தைகளை சாப்பிட வைக்க எளிய வழி இது. 

வெஜிடபிள் சூப்பை சிலர் விரும்ப மாட்டார்கள். அவர்களை விரும்ப வைக்க, சூப் போன்றவற்றை கொடுக்கும் பொழுது துருவிய முந்திரி, சீவிய பாதாம், வறுத்த பிரட் துண்டுகளை அதன் மீது போட்டு அலங்கரித்து கொடுத்துப் பாருங்கள் உனக்கு எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு குடிப்பார்கள். 

ர்க்கரை வள்ளிக்கிழங்கை பொரியல் போன்றவற்றில் சேர்த்தால் அதன் இனிப்பு சுவையை விரும்ப மாட்டார்கள். அதற்குப் பதிலாக அதை வேகவைத்து மசித்து சுண்டல், பட்டாணி போன்றவற்றுடன் சேர்த்து பூரணம் செய்து சமோசா, சப்பாத்திக்கு உள்ளில் வைத்து பரோட்டாவாக கட்லெட், கச்சோரி போன்ற வடிவங்களில் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள் சத்தும் கிடைக்கும். 

இதையும் படியுங்கள்:
‘ஹரி மிர்ச்சி கா ஆச்சார்' (Hari Mirch ka Achaar) செய்வது எப்படி தெரியுமா?
healthy recipes

ள்ளை வறுத்துக் கொடுத்தால் அதை சாப்பிட விரும்ப மாட்டார்கள். அதற்கு எள்ளை வறுத்து அதனுடன் வற்றல் மிளகாய் உப்பு போன்றவற்றை சேர்த்து பொடித்து அதை எண்ணெயில் தாளித்து, ஒரு கப் சாதத்தை அதில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கால்சியம் சத்து உடம்புக்கு கிடைக்கும். 

ண்டிகைக் காலங்களில் வாழைப்பழங்கள் அதிகமாக வீட்டில் இருக்கும். அவற்றை வீணாக்காமல் தோலை உரித்து பொடியாக நறுக்கி அதனுடன் பேரிச்சம்பழம், நெய், டைமண்ட் கல்கண்டு, தேன் , நாட்டு சர்க்கரை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து பிசைந்து பஞ்சாமிர்தமாக அனைவரும் சாப்பிடலாம். 

வராத்திரி சமயங்களில் நிறைய சுண்டல் வகைகள் மீந்து விட்டால் அவற்றினை நன்றாக பொடித்து காரம், மல்லித்தழை சேர்த்து தால் கொழுக்கட்டை,  தால் பூரி, தால் பரோட்டாவாக செய்து கொடுக்கலாம். 

இப்படி மீந்துபோனவற்றை வேற்று உருவில் மாற்றிக் கொடுத்தால் பொருளும் வீணாகாது. உடம்புக்கு தேவையான சத்தும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com