சிறந்த பகல் உணவு எது தெரியுமா..?

best lunch...
healthy foodsImage credit - pixabay
Published on

மது உடலுக்கு சக்தியை தருவது கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும்தான். நமது உடலில் திசு வளர்ச்சியை மேனேஜ் செய்வது 'புரோட்டின்" சத்து. வைட்டமின்கள் சத்துக்கள் மற்ற பணிகளை கவனிக்கிறது. தாதுக்கள் உடலிலுள்ள திரவ அளவை பராமரிக்கிறது, நரம்புகள் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. நீர் சத்து உடல் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது. நார்ச்சத்து நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

நாம் சாப்பிடும் திட உணவில் 50-60 சதவீதம் கார்போஹைட்ரேட்டும், 25 சதவீதம் கொழுப்பு சத்தும், 15-20 சதவீதம் புரோட்டீன் சத்தும், 5 சதவீதம் தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்களும், 5 சதவீதம் நார்ச்சத்தும் இருக்கவேண்டும்.

பகல் நேரத்தில்தான் நமக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படுகிறது. அதற்கேற்றபடி நம் பகல் நேர உணவில் சீராகக் கலோரிகள் பரவலாக கிடைக்கும்படி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் குளுக்கோசாகவும், கொழுப்புகள் கொழுப்பு அமிலங்களாகவும் மாறி நமக்கு  ஆற்றலை வழங்குகின்றன. கொழுப்புகள் ஜீரணமாக அதிக நேரமாகும் என்பதால் நமக்கு ஆற்றலும்  உடனடியாக கிடைப்பதில்லை. மாறாக கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் வடிவத்தில் உடனடியாக ஆற்றலை வழங்குகிறது. எனவே மதிய உணவில் அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்கள் சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது.

அதற்காக கார்போஹைட்ரேட்களை மட்டுமே தனியாக உட்கொண்டாலும் சிக்கல்தான். அவைகள் "டிரிப்டோபான்" என்ற அமினோ அமிலம் மூளை செல்களுக்குள் புகுவது எளிதாக்கி தூக்கம் வரவழைக்க உதவுகிறது. இது தான் நம்மில் பலருக்கு பகல் நேரத்தில் தூக்க கலக்கம் வரக் காரணமாகிறது. பகல் நேரத்தில் தூக்க உணர்வுடன் வேலை செய்ய முடியுமா? எனவே பகல் நேர உணவில் புரதங்களையும் சேர்த்துக் கொண்டால் அவை "டிரிப்டோபான்" கள் மூளைக்குள் புகுவதை குறைத்து தூக்க உணர்வை குறைத்துவிடும். எனவே பகல் நேரத்தில் கார்போஹைட்ரேட்டும், புரதங்களும் சமநிலைப்படுத்தப்பட்ட  உணவே உத்தமானது. இவ்வாறாக காலை உணவையும், மதிய உணவையும் சாப்பிடுபவர்கள் காலையில் விரைவான சுறுசுறுப்பையும், துடிப்பையும். பிற்பகலில் குறைவான தூக்க உணர்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்களேன் வெண்டக்காய் ஃப்ரையும், கத்திரிக்காய் ஃப்ரையும்!
best lunch...

பகலில் சுறுசுறுப்பாகயிருக்க காலை உணவில் புரதம் நிறைந்த உணவுகளையும், மதிய உணவில் அரிசி சாதத்துடன் பருப்புகள், மொச்சை போன்றவைகள், உணவில் சேர்த்துக்கொள்ள மாலை நேரம் வரை சோர்வு இல்லாமல் பணியாற்றலாம் என்கிறார்கள்.

கல்லீரல், பித்தப்பை போன்ற உறுப்புகளுக்கும், வளர்சிதை மாற்றம் எனும் முக்கியமான பணிக்கும், முதுமையை தடுப்பதற்கும் உதவும் அமிலம் "லைசின்" எனும் அமினோ அமிலம் இது அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், பீட்ரூட், காரட், டர்னிப் போன்ற காய்கறிகள், பப்பாளி, பேரிக்காய், ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களிலும் உள்ளது.

உடல் உறுப்புகள் எப்போதும் ஒரே சீராக இருக்க வைட்டமின் பி 6 எனும் "பைரிடாக்ஸின்" உணவு மதியம் தேவை. இது அரிசி, கோதுமை,  சோளம், வாழைக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், வேர்க்கடலை, வால்நட் பருப்பு மற்றும் தயிர் போன்ற உணவுகளில் நிறைய உள்ளது.

அதேபோல் "லைசின்" உடலில் எப்போதும் இருக்க தக்காளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, கீரை, பாசிப்பருப்பு போன்றவைகளும் தேவை. மதிய உணவில் அரிசி சாதம், இரண்டு சப்பாத்தி, காய்கறி சாலட், பாசிப்பருப்பு சாம்பார், தயிர், ஏதேனும் ஒரு கீரை, இறுதியில் ஒரு கப் பழச்சாறு என்று சாப்பிட்டால் போதும். இதன் மூலம் இளமை நீடிக்கும், வாழ்நாளும் கூடும் என்கிறார்கள் கலிபோர்னியா ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆய்வாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com