இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்களேன் வெண்டக்காய் ஃப்ரையும், கத்திரிக்காய் ஃப்ரையும்!

healthy foods,
healthy foods,Image credit - youtube.com
Published on

ப்போதுமே சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக வதக்கிய ஃப்ரை ஐட்டங்களை விரும்புவார்கள். இப்படி ஒருமுறை கத்திரிக்காய் ஃப்ரை அண்ட் வெண்டைக்காய் ஃப்ரை  செய்து தாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்

வெண்டைக்காய் ஃப்ரை;

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - கால் கிலோ
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
பூண்டு -நான்கு பல்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன் தக்காளி - ஒன்று
காரமான ஊறுகாய்-  இரண்டு ஸ்பூன் ( வீட்டில் உள்ள எதுவும்)  எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
முதலில் வெண்டைக்காயை கழுவி நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய காயை போட்டு சிம்மில் வைத்து நன்றாக வணக்கவும். (சற்று கூடுதல் எண்ணெய் விடவும்) காய் நன்றாக வெந்து சுருங்கியதும் தனியே எடுத்து வைக்கவும். இப்போது வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான இரும்பு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து கூடவே கருவேப்பிலையும் போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானதும், பொடியாக்கிய பச்சை மிளகாய் ஒன்று இரண்டாக நசுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் காரத்திற்கு சாம்பார்தூள், கரம் மசாலா சேர்த்து தூள் வாசனை போகும்வரை வதக்கி நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். இவை அனைத்தையும் மிதமான தீயில் வதக்கி மசாலா ஒன்று சேர்ந்து வந்ததும் வறுத்து வைத்த வெண்டைக்ககாயை அதில் போட்டு தேவையான உப்பையும் சேர்த்துக்கிளறி இறுதியாக ஊறுகாய் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். இந்த சுருக்கென்ற காரசாரமான வெண்டைக்காய் ஃப்ரை தயிர் சாதத்துக்கு சூப்பரான காமினேஷன்.

கத்திரிக்காய் ஃப்ரை;

தேவையான பொருட்கள்;

கத்திரிக்காய் - 8
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
கடுகு சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பற்கள்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் -  1 ஸ்பூன்
சீரகத்தூள் -  1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - காரத்திற்கு
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான தேங்காய் லெமன் ரசம் வித் கத்திரிக்காய் தொக்கு செய்யலாமா?
healthy foods,

செய்முறை;
அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.  பின் துருவிய இஞ்சி மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். இப்போது நீளமாக அரிந்த கத்திரிக்காய் துண்டுகளையும் சேர்த்து சில நிமிடங்களுக்கு நன்கு வதக்கி கத்தரிக்காய் நிறம் மாறியதும் உடன் மஞ்சள் தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி கூடவே உப்பு  சேர்த்து நன்கு கலந்து லேசாக நீர் தெளித்து கடாயை மூடி ஏழு முதல் 10 நிமிடங்களுக்கு வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வந்தது வந்ததும் சிம்மில் வைத்து சில நிமிடங்கள் நன்றாக வதக்கி  இறக்கும்போது மிளகுத்தூள் தூவி ஒரு நிமிடம் கிளறி மேலே சிறிது கறிவேப்பிலை தூவி மூடி வைத்து தயிர் சாதத்துக்கு தொட்டுக்க தந்தால் சூப்பர் பாராட்டு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com