உலகின் விலை உயர்ந்த பன்னீர் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா?

health awarness
health awarness
Published on

ழக்கமாக பசு அல்லது எருமைப் பாலில் இருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில் தாவரங்களில் இருந்து பெறப்படும் பாலில் இருந்தும், சோயா பீன் பாலில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பன்னீர் விலை ஒரு கிலோவிற்கு ₹250 லிருந்து அதிகபட்சம் ₹450 வரை விற்கப்படுகிறது.

அதே நேரம் 1 கிலோ பன்னீர் ₹1,00,000 விற்கப்பட்டால் அது மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும். அப்படி என்ன அந்த பசு பாதாம், பிஸ்தா சாப்பிட்டு பால் கொடுக்கிறதா? அதுதான் இல்லை, இவ்வளவு விலை உயர்ந்த பன்னீர் கழுதைப்பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதுதான் ஆச்சரியம்.

மூன்று தசாப்த காலத்திற்கு முன்னர், நெடுங்காலம் வரை கழுதை என்பது ஒரு இழிவான விலங்காக கருதப்பட்டது. அதை சுமை தூக்கும் விலங்காக மட்டுமே வைத்திருந்தனர். ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் கழுதையின் மகத்துவம் தெரிந்திருந்தது. எகிப்து ராணி கிளியோபாட்ரா தனது சரும அழகை பாதுகாக்க, தினமும் தனது குளியல் தொட்டி முழுக்க கழுதைப்பாலை ஊற்றி அதில் குளிப்பாராம்.

தற்போது கழுதைப் பாலில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் அதிக விலை உயர்ந்ததாக உள்ளது. பொதுவாக மக்கள் கழுதையின் பால் இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர் மற்றும் சீஸ் மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளன.

வட இந்தியாவில் தினசரி உணவில் பன்னீர் கட்டாயம் இடம் பெறுகிறது. சாதாரண மக்கள் முதல் பெறும் பணக்காரர்கள் வரை தினசரி விலை கொடுத்து வாங்கும் அளவில்தான் பன்னீர் உள்ளது. 

இதையும் படியுங்கள்:
பிரெட் வைத்து செய்யக்கூடிய நாலு வகை பிரெட் ரெசிபிஸ்!
health awarness

20 ஆண்டு காலத்துக்கு முன்னர் பன்னீர் பாலின் விலையைவிட சற்று உயர்ந்ததாக மட்டுமே இருந்தது. தற்போதைய சூழலில் பாலில் விலையைப் போல 3 மடங்கு அதிகமாக அதிகமாக உள்ளது. ஆயினும் பன்னீரின் முக்கியத்துவம் இன்னும் குறைந்து விடவில்லை. சாதாரண பசு மற்றும் எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் விலை உயர்ந்தது என்று நினைப்பவர்கள், கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரின் விலையைக் கேள்விப்பட்டால் ஆச்சரியப்படுவார்கள். 

கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரின் விலை கிலோ ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. கழுதைப் பாலில் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், லைசோசைம் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் பாலில் அதிக லாக்டிக் அமிலம் உள்ளது, இதனால் யாருக்கும் வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் ஏற்படாது.

இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழுதைப் பாலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. அவை நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

பசு மற்றும் எருமைகளோடு ஒப்பிடும்போது கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் அரிதாக உள்ளது. கழுதை ஒரு நாளைக்கு 200 முதல் 300 மிலி பால் மட்டுமே தருகிறது. ஒரு லிட்டர் பாலுக்கு பல கழுதைகள் தேவைப்படுகின்றன.

கழுதைகள் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டதால் அதன் விலையும் மிகவும் அதிகமாக உள்ளது. கழுதைப் பாலில் 1 கிலோ பன்னீர் தயாரிக்க 25 லி பால் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் கழுதைப் பால் ₹2000 க்கு விற்பனை ஆகிறது. குஜராத்தை சேர்ந்த பல தொடக்க நிறுவனங்கள் கழுதைப் பால் பன்னீர் தயாரித்து விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com