பிரெட் வைத்து செய்யக்கூடிய நாலு வகை பிரெட் ரெசிபிஸ்!

Bread recipes
Bread recipes
Published on

வெஜ் பிரெட் ஆம்லெட் 

தேவை:

பிரட் துண்டுகள் - 8 

கடலை மாவு - 1 கப் 

கேரட் துருவல், முட்டைகோஸ் துருவல் - தலா 3 டேபிள் ஸ்பூன் 

நறுக்கிய பச்சை மிளகாய் - 1 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 

கடலை மாவில் சிறிது நீர் விட்டுக்கரைத்து, உப்பு, பச்சை மிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல் சேர்க்கவும். அந்தக் கரைசலில் பிரட் துண்டுகளை தோய்த்துத் தோய்த்து எடுத்து, தவாவில் ஒவ்வொன்றாக போட்டு எண்ணெய் விட்டு, இருபுறமும் சூடாக்கி எடுக்கவும். வித்தியாசமான வெஜ் பிரெட் ஆம்லெட் ரெடி.

பிரெட் அல்வா

தேவை:

ஸ்வீட் பிரெட் - முழு பாக்கெட் 

நெய் - அரை கப் 

சர்க்கரை - 2 கப் 

முந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப

ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன் 

செய்முறை: 

ஸ்வீட் பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரிப் பருப்பை பொரித்து எடுக்கவும். அதே நெய்யில் பிரெட் துண்டுகளை போட்டு, பொன்னிறமானதும், சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். அல்வா பதத்திற்கு திரண்டு வந்ததும், ஏலக்காய் தூள் தூவி இறக்கி, தாம்பாளத்தில் கொட்டி பரப்பி, ஆறியதும் வில்லைகள் போடவும். சுவையான பிரெட் அல்வா தயார்.

இதையும் படியுங்கள்:
கோடைக்கு சூப்பர் கூலான மில்க் சர்பத் - ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் செய்யலாம் வாங்க!
Bread recipes

பிரெட் உப்புமா

தேவை:

பிரட்  - முழு பாக்கெட் 

உருளைக்கிழங்கு - 1 

தேங்காய் துருவல் -  3 டேபிள் ஸ்பூன் 

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

இஞ்சித் துருவல் - 2 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 8

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க 

செய்முறை: 

பிரெட்டை துண்டுகளாக்கி உதிர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி உதிர்த்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு இவற்றை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை தாளித்து, முந்திரிப்பருப்பை ஒடித்து போட்டு வறுத்து, பிறகு உதிர்த்த உருளைக்கிழங்கு உதிர்த்த பிரட் சேர்த்து கிளறவும். அரைத்த விழுதைப்போட்டு கலந்து இறக்கி வைக்கவும்.

பிரெட் பஜ்ஜி 

தேவை:

பிரட் துண்டுகள் - 6

கடலை மாவு - அரை கப் 

அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 3 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிது 

மிளகாய்த்தூள் -1 ஸ்பூன் 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

கெட்டித் தயிர் - 6 ஸ்பூன் 

செய்முறை: 

அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு இவற்றை நீர்விட்டு இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். பிரட் துண்டுகளின் இருபுறமும் தயிரைத் தடவி விட்டு, மாவு கரைசலில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மொறு மொறு பிரெட் பஜ்ஜி தயார்.

இதையும் படியுங்கள்:
கீரைகளை வதக்கலாமா? இட்லி பாத்திரத்துல 5 நிமிடம் வேகவைச்சு சமைக்கலாமா?
Bread recipes

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com