குக்கரில் சமைக்கும்போது தண்ணீர் வெளியேறுகிறதா..? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க..!

குக்கரில் சமைக்கும்போது தண்ணீர் வெளியேறுகிறதா..? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க..!
Editor 1

ன்றைய அவசர சூழலில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குக்கர்தான் சமையல் வேலையை எளிதாக்குகின்றன. எனவே தினசரி சமையலுக்கு குக்கர் என்பது தேவையான விஷயமாக மாறிவிட்டது. எப்போதாவது அது சரியாக வேலை செய்யவில்லை எனில் அன்றைய சமையலே தாமதமாகிவிடும். பொதுவாக வருடங்கள் கடந்தாலே குக்கர் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிடும். இதற்கு அந்த குக்கரை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. எந்த பிராண்டாக இருந்தாலும், குக்கரை சரியாக பராமரிக்கவில்லை எனில் பிரச்சனைகள் வரலாம்.

அப்படி குக்கரில் அடிக்கடி வரும் பிரச்சனைகளில் ஒன்று தண்ணீர் வெளியே கசிவது.. இதற்கு பொதுவான காரணம் சுத்தமின்மை. சாதாரண பாத்திரங்களைப் போலவே, குக்கரையும் தேய்க்கக்கூடாது. சுத்தம் செய்வதில் அதற்கென சில நுணுக்கங்களை பயன்படுத்த வேண்டும். அதை சரியாக பின்பற்றினாலே இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சில மாதங்களுக்குப் பிறகு குக்கர் மூடியின் ரப்பர் தளர்வாகிவிடும். இதனால் கூட குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறும் . ரப்பர் தளர்வாக இருந்தால், அதை உடனே மாற்ற வேண்டும். ரப்பர் சீக்கிரம் தளர்வாவதை தவிர்க்க சமைத்த பிறகு குளிர்ந்த நீரில் ரப்பரைப் போட்டால், அது நீண்ட காலம் நீடிக்கும். சிலர் குக்கர் ரப்பர்களை ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால் லீக்கேஜ் பிரச்சனையும் வராது என்பார்கள்.

பல நேரங்களில் குக்கரில் உள்ள விசிலில் உணவு சிக்கிக் கொள்ளும். விசில் அழுக்காக இருந்தால், நீராவி சரியாக செல்ல முடியாது. எனவே குக்கரின் விசிலை முழுவதும் திறந்து பார்த்து அடைப்புகளை வெளியேற்ற வேண்டும். இதை பாத்திரம் துலக்கும்போதே செய்துவிட்டால் பிரச்சனை இல்லை. தூரிகை மூலம் நன்கு சுத்தம் செய்து பின்னர் பயன்படுத்தவும்.

குக்கரில் இருந்து தண்ணீர் வராமல் இருக்க நீங்கள் காய்கறி, பருப்பு அல்லது அரிசி சேர்க்கிறீர்கள் எனில் அதில் ஒரு சொட்டு எண்ணெய் விடுங்கள். அதோடு குக்கரின் மூடியைச் சுற்றி எண்ணெய் தடவவும். இது குக்கரில் உள்ள தண்ணீர் வெளியேற அனுமதிக்காது.

குளிர்ந்த நீர் ஊற்றி சமைப்பதன் மூலம் குக்கரில் இருந்து தண்ணீர் வருவதைத் தடுக்கலாம். அப்படி ஒருவேளை தண்ணீர் வந்தால் குக்கரில் இருந்து தண்ணீர் வந்தால் மூடியைத் திறந்து குளிர்ந்த நீரில் கழுவி மீண்டும் மூடினால் தண்ணீர் வராது.

குக்கரில் அதிக தண்ணீர் ஊற்றினால் அல்லது குக்கரை அதிக தீயில் வைத்தால் தண்ணீர் கசிவு ஏற்படும். எனவே குக்கரில் உணவு சமைக்கும் போது தண்ணீரின் அளவு சரியாக இருக்க வேண்டும். மிதமான தீயில் சமைத்தால் குக்கரில் உள்ள தண்ணீர் வெளியே வராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com