கோவைக்குப் போனா இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணிடாதீங்க...

Don't miss these dishes
tasty recipes
Published on

கோயமுத்தூர் என்றாலே டெக்ஸ்டைல் பிசினஸ், மலையும் மழையும் உள்ள சொர்க்கம், கொங்கு தமிழ், ஐடி பார்க் என்றுதான் பெரும்பாலானோர் நினைத்திருக் கிறார்கள். ஆனால் உண்மையிலேயே உணவுப் பிரியர்களுக்கான சைவம், அசைவம் ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ், ஸ்ட்ரீட் ஃ புட் என்று சாப்பிட ஏற்ற இடம் இந்தக் கோவை மாநகரம் . அந்த வகையில் கோவை சென்றால் சாப்பிட வேண்டிய 5 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1.கோவை ஸ்டைல் நெய் ரோஸ்ட்

கோவை ஸ்டைல் நெய் ரோஸ்ட் கலை வேலைப்பாடு மற்றும் தனி சுவையுடன் கூடிய உணவாகும். மெல்லிய முறுகலான தோசை மேலே பளபளப்பாக நெய் தடவி, அதனுடன் சுடச்சுட சாம்பார், சிகப்பு ,வெள்ளை பச்சை என மூன்று கலர் சட்னியுடன் பரிமாறும் போதே நாக்கில் எச்சில் ஊறும் . பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, சாப்பிட்டால் வயிறு மட்டுமல்ல மனதையும் நிரப்பும். அதுவும் 1960களில் இருந்து இன்று வரை கோவையில் பிரபலமான ஸ்ரீ அன்னபூர்ணா ரெஸ்டாரண்டில் தோசையை ஒரு கடி கடித்தால் அதனுடைய கிரிஸ்பி சவுண்டும் நெய்யோட மணமும் உங்களை அடிமையாக்கி விடும்.

2.பள்ளிபாளையம் சிக்கன்

கோழி துண்டுகளை மிளகு, பூண்டு, இஞ்சி, உலர்ந்த மிளகாய் இதெல்லாம் கலந்து ஒரு ஸ்பைஸி மசாலாவுடன் வறுத்து எடுப்பதுதான் பள்ளிபாளையம் சிக்கன். இந்த ஊர் கோவைக்கு அருகில் இருப்பதால் கொங்கு நாட்டின் உணவு கலாச்சாரத்துடன் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது .இந்த பள்ளிபாளையம் சிக்கனை பரோட்டா, சாதத்துடன் சாப்பிட வயிறும் மனதும் ஃபுல் ஆகிவிடும்.

3.காளான் வறுவல்

கோவையின் தெருவோர ஸ்டால்களின் ஸ்டாராக இருக்கும் காளான் வறுவலில் , புது மஷ்ரூம்ஸை எடுத்து, மசாலா தூள், மிளகு, கறிவேப்பிலை போட்டு ஒரு பேட்டரில் ஃபிரை செய்து கொடுப்பார்கள். இதை சாப்பிடும்போது இதன் கிரிஸ்பி டெக்ஸ்சர், ஸ்பைஸி டேஸ்ட் சாப்பிட்டவுடனே "இன்னொரு பிளேட்"னு கேட்க வைக்கும். கோவையில் மாலை நேர சிற்றுண்டி கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கும் காளான் வறுவலை லோக்கல் ஸ்டால்ஸ் பக்கம் தாராளமாக சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் மாம்பழ பூரி - தேங்காய் பால் கரி செய்யலாம் வாங்க!
Don't miss these dishes

4.அரிசி பருப்பு சாதம்

அரிசி, பருப்பு, கொஞ்சம் மசாலா, தேங்காய், நெய்யுடன் சேர்த்து சமைக்கப்படும் அரிசி பருப்பு சாதம் வீட்டு சாப்பாட்டை நினைவு படுத்தும் கொங்கு நாட்டு கிராமப்புற உணவு பாரம்பரியத்தின் எளிய உணவாக இருக்கிறது . இதனுடன் அப்பளம், பொறித்த பச்சை மிளகாய் ,அவியல் வைத்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

5.இளநீர் பாயாசம்

ஒரு புத்துணர்ச்சி டெசர்ட் ஆக இருக்கும் இளநீர் பாயாசத்தில், இளநீர், புது தேங்காய் துருவல், அரிசி, பால், ஏலக்காய், கொஞ்சம் முந்திரி சேர்த்து சமைக்கப்படுவதை சாப்பிடும்போது இதனுடைய க்ரீமி டெக்ஸ்சர், லேசான ஸ்வீட்னெஸ் "இன்னொரு கிண்ணம்" என்று கேட்க வைக்கும்.

கோவைக்கு செல்லும்போது மேற்கூறிய 5 உணவுகளை சாப்பிட்டு கூறியவை அனைத்தும் உண்மையா என பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com