அல்டிமேட் சுவையில் மாம்பழ பூரி - தேங்காய் பால் கரி செய்யலாம் வாங்க!

mango poori-coconut milk curry
mango poori-coconut milk curry
Published on

ன்றைக்கு சுவையான மாம்பழ பூரி மற்றும் தேங்காய் பால் கரி ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

மாம்பழ பூரி செய்ய தேவையான பொருட்கள்.

மாம்பழம்-2

மைதா மாவு-1 கப்

கோதுமை மாவு-1/2 கப்

ரவை-1/4 கப்

சுக்கு- சிறிதளவு

சர்க்கரை-1 தேக்கரண்டி

குங்குமப்பூ-சிறிதளவு

எண்ணெய்-தேவையான அளவு

மாம்பழ பூரி செய்முறை விளக்கம்.

முதலில் மாம்பழத்தை நன்றாக தோலுரித்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து அத்துடன் 1 தேக்கரண்டி சர்க்கரை,  குங்குமப்பூ சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 பவுலில் 1 கப் மைதா மாவை சேர்த்துக் கொண்டு அத்துடன் ½ கப் கோதுமை மாவு, ¼ கப் ரவையை சேர்த்து நன்றாக கலந்துவிட்டப் பிறகு சுக்கு சிறிது சேர்த்துக் கொண்டு அரைத்து வைத்திருக்கும் மாம்பழ கலவையை சேர்த்து பிசையவும். மாவு நன்றாக பூரி மாவு பதத்திற்கு வந்ததும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது மாவை நன்றாக பூரி போல திரட்டிவிட்டு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானாதும் பூரி பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான மாம்பழ பூரி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

தேங்காய் பால் கரி செய்ய தேவையான பொருட்கள்.

தேங்காய் எண்ணெய்-தேவையான அளவு

கடுகு-1 தேக்கரண்டி

வெந்தயம்-1/2 தேக்கரண்டி

வரமிளகாய்-4

பச்சை மிளகாய்-1

பூண்டு-5

இஞ்சி-1 துண்டு

வெங்காயம் 2,

தக்காளி 2

கருவேப்பிலை-சிறிதளவு

கொத்தமல்லி- சிறிதளவு

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி

மல்லித்தூள்-2 தேக்கரண்டி

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி

உப்பு-1 தேக்கரண்டி

புளி-சின்ன நெல்லிக்காய் அளவு

தேங்காய் பால்-1 கப்

தேங்காய் பால் கரி செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, வெந்தயம் ½ தேக்கரண்டி, வரமிளகாய் 4, பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு 5, இஞ்சி 1 துண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

இப்போது நறுக்கிய வெங்காயம் 2, தக்காளி 2 சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். இதில் மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மல்லித்தூள் 2 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு புளி சின்ன நெல்லிக்காய் அளவு கரைத்து சேர்த்துவிட்டு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். இதில் தேங்காய் பால் 1 கப் சேர்த்துவிட்டு கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான தேங்காய் பால் கரி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் மாம்பழ அல்வா - வாழைத்தண்டு மசாலா வடை செய்யலாம் வாங்க!
mango poori-coconut milk curry

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com