டபுள் கா மீத்தா செய்முறை: ஆஹா! செம்ம டேஸ்ட!

Double Ka Meetha Recipe
Double Ka Meetha Recipe
Published on

இனிப்புகளின் உலகில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹைதராபாத் ஸ்பெஷல் டபுள் கா மீத்தா, பஞ்சு போன்ற மென்மையான ரொட்டி, கிரீமி கஸ்டர்ட் மற்றும் பாதாம், பிஸ்தா,முந்திரி தூள் ஆகியவற்றின் கலவையால் தயாரிக்கப்படும் அற்புதமான உணவு. இந்தப் பதிவில் வீட்டிலேயே எளிதாக டபுள் கா மீத்தா எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

வரலாறு: இந்த சுவையான இனிப்பின் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. சிலர் இது முகலாய காலத்தில் இருந்து வந்ததாக சொல்கின்றனர். அதேசமயம் மற்றவர்கள் இது ஹைதராபாதி நவாபுகளின் காலத்தில் உருவானதாகக் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் இந்த இனிப்பு ஐதராபாதி சமையலின் அடையாளமாக தற்போது மாறியுள்ளது.

டபுள் கா மீத்தா செய்வதற்கான பொருட்கள்: 

  • பிரெட் (2-3 துண்டுகள்)

  • பால் (1 லிட்டர்)

  • சர்க்கரை (1 கப்)

  • ஏலக்காய் பொடி (1/4 டீஸ்பூன்)

  • நெய் (தேவைக்கேற்ப)

  • பாதாம் 10 (அலங்கரிக்க)

  • பிஸ்தா 10 (அலங்கரிக்க)

  • முந்திரி 10(அலங்கரிக்க)

செய்முறை: 

முதலில் பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி சதுர வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும். பால் கொதித்ததும் நெருப்பை குறைத்து பிரட் துண்டுகளை பாலில் போடுங்கள். 

மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சர்க்கரை முற்றிலுமாக கரைந்ததும், பாலில் ஊற வைத்த பிரட் துண்டுகளை எடுத்து மெதுவாக இந்தக் கலவையில் போடவும். 

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் மசாலா பொரி- Egg Bejo ரெசிபி செய்யலாம் வாங்க!
Double Ka Meetha Recipe

இப்போது மிகக் குறைந்த நெருப்பில் சுமார் அரை மணி நேரம் அப்படியே வேக வைக்கவும். அடி பிடிக்காமல் இருக்க விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இறுதியில், கெட்டியாகி சரியான பதத்திற்கு வந்ததும் வேறு ஒரு பவுலில் மாற்றி, மேலே பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை பொடியாக நறுக்கி அலங்கரித்து பரிமாறவும். 

இந்த ரெசிபி செய்யும் போது சரியான ரொட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும். உங்களது தேவைக்கு ஏற்ப பாலின் அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். சர்க்கரையையும் உங்களது தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். ரொட்டி துண்டுகளை வேக வைக்கும்போது கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லையேல் அடிபிடித்துவிடும். இந்த அட்டகாசமான ரெசிபியை 3 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். அதற்கு மேல் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 

இதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் சுவையான டபுள் கா மீத்தா செய்து அசத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com