அடிக்கிற வெயிலுக்கு மாங்காய் லெமன் சோடா குடிக்கலாம் வாங்க!

மாங்காய் லெமன் சோடா ...
மாங்காய் லெமன் சோடா ...

மாங்காய் லெமன் சோடா:

மாங்காய் 1

உப்பு  சிறிது

சர்க்கரை 2 ஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு 1 ஸ்பூன்

புதினா இலைகள் ஐந்து (அ)ஆறு

சோடா 1

அதிகம் புளிப்பில்லாத கிளி மூக்கு மாங்காய் ஒன்றை தோல் சீவி துண்டுகளாக்கி விடவும். மிக்ஸி ஜாரில் மாங்காய் துண்டுகள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஒரு ஸ்பூன், சர்க்கரை இரண்டு ஸ்பூன் சேர்த்து விருப்பப்பட்டால் புதினா இலைகள் ஐந்தாறு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும். இதனை வடிகட்டி தேவையான அளவு சோடா சேர்த்து பருக வெயிலுக்கு  மிகவும் இதமான மாங்காய் லெமன் சோடா தயார்.

இட்லிப் பொடி ரவா உருண்டை!

ரவை ஒரு கப் 

அவல் ஒரு கப்

உப்பு தேவையானது

சீரகம் 1 ஸ்பூன்

இஞ்சி துருவல்  2 ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிது

இட்லிப் பொடி..
இட்லிப் பொடி..Image credit -pramadhamfoods.com

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய்

ஒரு பாத்திரத்தில் ரவை ஒரு கப், மெல்லிய அவல் ஒரு கப் இரண்டையும் சேர்த்து தேவையான உப்பு, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிது சேர்த்து கிளறி விடவும். அடுப்பில் இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்கு சூடானதும் வெந்நீரை இந்தக் கலவையில் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடங்கள் தட்டைப் போட்டு மூடி வைக்கவும். பிறகு சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் எண்ணெய் தடவி வைத்து ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அந்த 63 நாட்கள்!
மாங்காய் லெமன் சோடா ...

வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிது கருவேப்பிலை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு தாளித்து கடுகு பொரிந்ததும் வெந்த உருண்டைகளை சேர்த்து கிளறவும். பெருங்காயத்தூள் அரை ஸ்பூன், இட்லிப் பொடி 4 ஸ்பூன் சேர்த்து கிளறி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். 

மிகவும் சுவையான காலை டிபன் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com