சத்தான Dry fruits milk shake!

சத்தான Dry fruits milk shake!
Updated on

கால்சியம் சத்து மிகுந்த ராகி 1 கப்

உலர் பழங்கள், பாதாம் 5 

முந்திரி பருப்பு 5

திராட்சை 10

பேரிச்சம்பழம் 5

 ஏலக்காய் 2 

காய்ச்சிய பால் 2 கப்

நாட்டு சக்கரை தேவையான அளவு

       கேழ்வரகை அரை மணி நேரம் ஊற விட்டு ஒரு கப் பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நன்கு அரைந்ததும் வடிகட்டி மேலும் அரை கப் தண்ணீர் விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சம்பழம் ஆகியவற்றை சிறிது நீரில் 15 நிமிடங்கள் ஊற விடவும்.

        இப்போது அடிகனமான பாத்திரத்தில் அரைத்தெடுத்த கேழ்வரகு பாலை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். கண்ணாடி பதத்தில் வந்ததும் கேழ்வரகு வெந்து விட்டது என்று அறிந்து கொள்ளலாம். இப்பொழுது பாதாமை தோல் நீக்கி, முந்திரி, திராட்சை, பேரிச்சம்பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கேழ்வரகுடன் சேர்த்து  கிளறி இறக்கி மீதமுள்ள பால், நாட்டு சக்கரை சேர்த்து கலந்து மிதமான சூட்டில் பருக சுவையான சத்தான மில்க் ஷேக் ரெடி.

       எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம்.

logo
Kalki Online
kalkionline.com