வாயில் கரையும் துரியான் ஐஸ்கிரீம் மற்றும் கேக்: தென்கிழக்கு ஆசியாவின் ராஜ சுவை இனி உங்கள் வீட்டில்!

மலேசியாவின் ஸ்பெஷல் துரியான் பழத்தை வைத்து மிக எளிமையாக ஐஸ்கிரீம் மற்றும் பஞ்சு போன்ற கேக் செய்யும் ரகசியம்.
துரியான் செய்முறை|durian ice cream making
துரியான் செய்முறைAI image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

லேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமான, தனித்துவமான வாசனையும் சுவையும் கொண்ட துரியான் (Durian) பழத்தை வைத்து ஐஸ்கிரீம், மற்றும் கேக் எப்படி எளிமையாக செய்வது என்று பார்ப்போம்.

துரியான் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள்:

துரியான் பழக்கூழ் -1 கப் (கொட்டைகளை நீக்கி, மிக்ஸியில் நைஸாக அரைத்தது)

விப்பிங் கிரீம் -1 கப் (நன்றாகக் குளிர்ந்திருக்க வேண்டும்)

கெட்டிப்படுத்தப்பட்ட பால் -½ கப்

நறுமணமிக்க துரியான் செய்முறை மூலம் வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த விப்பிங் கிரீமை ஊற்றி, எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க் (Whisk) கொண்டு அது தடிமனாகும் வரை நன்றாக அடிக்கவும். அடித்த கிரீமுடன் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் அரைத்து வைத்துள்ள துரியான் பழக்கூழைச் சேர்த்து, ஒரு கரண்டியால் மெதுவாகக் கலந்துவிடவும். இந்தக் கலவையை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி, சமப்படுத்தி மூடிவிடவும்.

இதை ஃப்ரீசரில் (Freezer) குறைந்தது 6 முதல் 8 மணிநேரம் அல்லது இரவு முழுதும் வைத்தால் சுவையான, நறுமணமிக்க துரியான் ஐஸ்கிரீம் தயார்.

துரியான் செய்முறை|a durian  cake making
துரியான் செய்முறைAI Image

துரியான் ஸ்பாஞ்ச் கேக் தேவையான பொருட்கள்:

துரியான் பழக்கூழ் -½ கப்

மைதாமாவு -1 கப்

முட்டை -3 (வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள்கருவைத் தனித்தனியாகப் பிரிக்கவும்)

சர்க்கரை -½ கப் (பொடித்தது)

சமையல் எண்ணெய் அல்லது வெண்ணெய் -¼ கப்

பால் -3 மேஜைக்கரண்டி

பேக்கிங் பவுடர் -1 தேக்கரண்டி

உப்பு -ஒரு சிட்டிகை

ஓவன் மற்றும் குக்கரில் பஞ்சு போன்ற கேக் செய்ய உதவும் துரியான் செய்முறை

ஒரு பாத்திரத்தில் 3 முட்டைகளின் மஞ்சள்கரு, எண்ணெய் (அல்லது உருகிய வெண்ணெய்), பால் மற்றும் துரியான் பழக்கூழ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த மஞ்சள்கரு கலவையுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சலித்துச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் மிருதுவாகக் கலந்து தனியே வைக்கவும்.

மற்றொரு உலர்ந்த பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றி அடிக்கவும். அது நுரைத்து வரும்போது, பொடித்த சர்க்கரையைச் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, நல்ல கெட்டியான வெள்ளை க்ரீம் பதத்திற்கு வரும் வரை அடிக்கவும். இந்த வெள்ளைக்கரு கிரீமை, ஏற்கனவே கலந்து வைத்துள்ள மாவு கலவையுடன் 3 முறைகளாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, மெதுவாக ஒரே திசையில் கலந்துவிடவும் (Over-mix செய்யக்கூடாது, இல்லையென்றால் கேக் சாஃப்ட்டாக வராது).

அவனில் கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, மாவைக்கொட்டி, நன்றாகத் தட்டவும். 170°C வெப்ப நிலையில் 30 முதல் 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

குக்கரில் உப்பைப் பரப்பி, ஸ்டாண்ட் வைத்து, மூடி 5 நிமிடம் சூடாக்கி, கேக் பாத்திரத்தை உள்ளே வைத்து மிதமான தீயில் 40-45 நிமிடங்கள் பேக் செய்யவும். கத்தி அல்லது டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்கும்போது அது ஒட்டாமல் வந்தால், பஞ்சு போன்ற துரியான் கேக் தயார். நன்றாக ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
மாம்பழ சீசனில் புதுமை: நாவூறும் ‘மேங்கோ ஃபஜெட்டோ’ மற்றும் ‘பனானா பிரெஞ்ச் டோஸ்ட்’!
துரியான் செய்முறை|durian ice cream making

'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் துரியான் பழத்தின் தனித்துவமான சுவையையும் நறுமணத்தையும், உலகெங்கும் விரும்பப்படும் ஐஸ்கிரீம் மற்றும் கேக் வடிவங்களில் கொண்டு வரும்போது அதன் சுவை இரட்டிப்பாகிறது. மெஷின் ஏதுமின்றி வீட்டிலேயே மிக எளிமையாகச் செய்யக்கூடிய கிரீமியான துரியான் ஐஸ்கிரீமும், வாயில் கரையும் பஞ்சு போன்ற துரியான் ஸ்பாஞ்ச் கேக்கும், துரியான் பழப் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்தாகும்.

மேற்கூறிய எளிய செய்முறை விளக்கங்களைப் பின்பற்றி, இந்த இரண்டு சுவையான பலகாரங்களையும் உங்கள் இல்லங்களிலேயே தயாரித்து, தென்கிழக்கு ஆசியாவின் இந்த அசத்தலான பாரம்பரியச் சுவையை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com