

கோடைக் காலத்திற்கு இதமான பாரம்பரிய மாம்பழ ரெசிபி தேவையான பொருட்கள்:
பழுத்த மாம்பழங்கள் -2
யோக்கர்ட் -1 கப்
கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் -2 கப்
உப்பு -தேவையான அளவு
மஞ்சள் பொடி -½ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் -½ டீஸ்பூன்
ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் -15
தாளிக்க தேவையான பொருட்கள்:
நெய் -1 டேபிள் ஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
இஞ்சி பச்சை மிளகாய் பேஸ்ட் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1 சிட்டிகை
மதிய உணவை அசத்தலாக்கும் குஜராத்தி ஸ்டைல் மாம்பழ ரெசிபி செய்முறை:
மாம்பழங்களை நசுக்கிப் பிசைந்து அதன் கூழை (Pulp) பிரித்தெடுத்துக் கொள்ளவும். கொட்டை மற்றும் தோலையும் தண்ணீரில் போட்டு, கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருக்கும் சதைப் பற்றையும் நன்கு நீக்கி, அந்த தண்ணீரை மாம்பழக் கூழுடன் சேர்த்துக்கொள்ளவும். யோக்கர்டை ஹேண்ட் பிளெண்டர் வைத்து நன்கு கடைந்து கொள்ளவும்.
மாம்பழக் கூழுடன் கடைந்த தயிரை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், பெருங்காய தூள் சேர்க்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரண்டியால் கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் நெய்யை ஊற்றவும். மிதமான தீயில் வைத்து, நெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின் கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அவை வதங்கிய பின் மாம்பழம்-தயிர் கரைசலை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும். கொதி வந்த பின் கொத்தமல்லி இலைகளை தூவி கடாயை அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இனிப்பு, புளிப்பு மற்றும் ஸ்பைஸஸ் கலந்த சுவையில் குஜராத்தி ஸ்டைல் மேங்கோ ஃபஜெட்டோ ரெடி.
மாம்பழ சீசனில் பலரும் மாம்பழங்களை உபயோகித்து டெஸ்ஸர்ட் வகைகளையே அதிகம் தயாரித்து உட்கொண்டு வரும்போது, குஜராத் மக்கள் மாம்பழத்தில் மேங்கோ ஃபஜெட்டோ செய்து சாதத்தில் குழம்பாக சேர்த்துப் பிசைந்து சாப்பிடுகின்றனர். நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாமே.
பனானா ஸ்டஃப்ட் பிரெஞ்ச் டோஸ்ட் ரெசிபி
தேவையான பொருட்கள்:
பிரட் ஸ்லைஸ் -2
வாழைப்பழம் -1
சர்க்கரை -2 டீஸ்பூன்
திக்கான பால் -தேவையான அளவு
பட்டர் -2 டீஸ்பூன்
மாலை நேர ஸ்நாக்ஸிற்கு ஏற்ற பனானா டோஸ்ட் சமையல் முறைகள்
வாழைப்பழத்தை வட்ட வட்ட துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின் அதை ஒரு ஸ்லைஸ் பிரட் துண்டின் மீது வரிசையாக அடுக்கி, அதை இன்னொரு பிரட் ஸ்லைஸால் மூடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். மிதமான தீயில் வைத்து, ஒரு டீஸ்பூன் பட்டரை கல்லில் தேய்க்கவும். அதன் மீது ரெடி பண்ணி வைத்துள்ள பிரட்டை கவனமுடன் அழுத்திப் பிடித்து எடுத்து வைக்கவும்.
பொன்னிறம் ஆகும் வரை ரோஸ்ட்டாக விடவும். மேற்புறத்தில் உள்ள பிரட் ஸ்லைஸ் மீது ஒரு டீஸ்பூன் பட்டர் தடவி அப்படியே அழுத்திப் பிடித்து திருப்பிப் போடவும். அது ரோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கும்போது மேற்புறம் உள்ள ஸ்லைஸ் மீது ஒரு டீஸ்பூன் சர்க்கரையை தூவி அதன் மேல் கொஞ்சம் பாலை ஊற்றவும்.
பின் வேகமா திருப்பிப் போட்டு மற்ற ஸ்லைஸ் மீதும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை தூவி பிரட் உறிஞ்சும் அளவுக்கு பாலை ஊற்றவும். தோசைக் கல்லில் சிதறியுள்ள பால் முழுவதும் உறிஞ்சப்படும் வரை டோஸ்ட்டான பிரட்டைஅட்ஜஸ்ட் பண்ணி கவனமுடன் எடுத்து தட்டில் வைக்கவும். சுவையான பனானா ஸ்டஃப்ட் பிரெஞ்ச் டோஸ்ட் ரெடி. சூடாகப் பரிமாறவும்.
இந்த கோடைக் காலத்தில் வழக்கமான இனிப்பு வகைகளைத் தாண்டி, உங்கள் குடும்பத்தினருக்கு முற்றிலும் மாறுபட்ட, ஆரோக்கியமான மதிய உணவு மற்றும் மாலை நேர ஸ்நாக்ஸ் மெனுவை நீங்கள் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து அசத்த முடியும். நாவூறும் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு சுவைகளின் கலவை உங்கள் சமையல் திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.