

பிரெட் ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்:
அரைத்த பிரெட் - 1 கப்
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
வெங்காயம் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் அரைத்த பிரெட், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் தவாவில் எண்ணெய் விட்டு மாவு ஊற்றி சுட்டு எடுத்தால், சுவையான பிரெட் ஊத்தாப்பம் தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பிரெட் பாயசம்
தேவை:
பிரெட் - 4 ஸ்லைஸ்,
சர்க்கரை - சுவைக்கேற்ப, முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் - சிறிதளவு, பசும் பால் - 4 கப்,
குங்குமப்பூ - சிறிது,
நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக்கி, நெய்யில் நன்கு வறுத்து எடுங்கள். பிறகு அதை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள். பொடித்ததை அளந்துகொண்டு, அதே அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்-கள். பிரெட்டுடன் சர்க்கரையை-யும், பாதி பாலையும் சேர்த்து கொதிக்கவிடுங்கள். கெட்டியாக ஆனவுடன் மீதி பாலை சிறிது சிறிதாக சேருங்கள். பால் கூடுதலாக விட்டால் சுவையாக இருக்கும். கடைசியில் நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டு, பொடித்த ஏலமும் போட்டு இறக்குங்கள். மேலே குங்குமப்பூவை தூவி பரிமாறுங்கள். அசத்தல் சுவையில் பிரெட் பாயாசம் தயார்.
கார்ன் பிரெட் டோஸ்ட்
தேவை:
மக்காச்சோள மணிகள் (வேகவைத்தது) - ஒரு கப், பிரெட் - ஒரு பாக்கெட்,
பச்சை மிளகாய் - 3,
சர்க்கரை - 2 டீஸ்பூன், அரிசிமாவு (அல்லது) கடலைமாவு - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்,
பால் - 2 கப்,
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யைக் காயவைத்து, அதில் அரிசிமாவு அல்லது கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். அடுப்பில் இருந்து மாவை இறக்கி, அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து, கட்டி இல்லாதவாறு நன்றாக கலக்கவும். மறுபடியும் அடுப்பில் வைத்து, இந்தக் கலவையை பேஸ்ட் ஆகும் வரை கிளறவும்.
பிறகு, வேகவைத்துள்ள சோளமுத்துக்கள், சர்க்கரை, (தேவையானால்) பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். பிரெட்டை டோஸ்ட் செய்து, இந்தக் கலவையை பிரெட்டின் மேல் பரப்பிக் கொடுக்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடு வார்கள். இரண்டு பிரெட்டுக்கும் நடுவே கார்ன் கலவையை வைத்து, டோஸ்ட் செய்தும் கொடுக்கலாம்.