சுவையான சமையல் குறிப்புகள்: பருப்பு அடை முதல் லட்டு வரை வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய டிப்ஸ்!

மரவள்ளிக்கிழங்கு, ரவா, தேங்காய்ப்பால், ராகிமால்ட், காலிஃப்ளவர் இலை, சோயா உருண்டை, பாதாம் பருப்பு போன்ற பொருட்களை சுவை, ஆரோக்கியம் இரண்டையும் சமநிலைப்படுத்த பயன்படுத்தும் வீட்டுச் சமையல் ரகசியங்கள்.
-home-cooking-tips
-home-cooking-tips
Updated on

ருப்பு அடைக்கு தேங்காய் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அடை வார்த்தால் மேலும் மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

போண்டாவுக்கு உளுந்து அரைக்கும்போது தண்ணீர் சற்று அதிகமாகிவிட்டால், மாவை வழித்து பாத்திரத்தில் வைத்து, அதில் ஒரு கைப்பிடி ரவையைத் தூவிக்கலந்து, சற்று நேரம் ஊறவைத்து எடுத்தால் மாவு கெட்டியாகி இருக்கும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ருசி மிகுந்த போண்டா செய்யலாம்.

காரக்குழம்பு செய்யும்போது காரம் அதிகமாகிவிட்டால், சிறிது தேங்காய்ப்பால் விட்டுக் கொதிக்கவைத்து இறக்கினால் காரம் குறைவதோடு குழம்பின் சுவையும் பிரமாதமாக இருக்கும்.

பொங்கல் செய்யும்போது முழு மிளகைப் போடுவதால் பலரும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அதைத்தவிர்க்க மிளகை நெய்யில் வறுத்துப்பொடி செய்து பொங்கலில் போட்டுக் கிளறிவிடலாம்.

லட்டுக்கு பூந்தி தயாரிக்கும்போது, கடலை மாவுடன், சிறிதளவு அரிசி மாவையும் கலந்துகொண்டால் பூந்தி முத்து முத்தாக வரும்.

தேங்காய் பர்ஃபி செய்யும்போது, கலவையில் ராகிமால்ட் இரண்டு டீஸ்பூன் சேர்த்தால், பர்ஃபி கமகமவென்றும் சூப்பர்  சுவையிலும்  இருக்கும்.

காலிஃப்ளவரை பயன்படுத்தியதும், இலையைத் தூக்கி எறியாமல் எண்ணைய் விட்டு வதக்கவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அதனுடன் உப்பு, வதக்கிய இலை சேர்த்து சுவையான துவையல் செய்யலாம்.

வடைக்கு மாவு அரைக்கும்போது சரியான பதத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க, அரைத்த மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து தண்ணீரில் போடுங்கள். சரியான பதம் என்றால் மாவு தண்ணீரில் மிதக்கும். கெட்டியாக அரைத்திருந்தால் நீரில் மூழ்கிவிடும். மிகவும் நீர்க்க அரைத்திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்து விடும்.

இதையும் படியுங்கள்:
சுவையான சமையல் குறிப்புகள்: விருந்தினர்களை அசத்த சில எளிய டிப்ஸ்!
-home-cooking-tips

உருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேகவைத்து, தோலுரித்து, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து,ஃப்ரெஷ் தயிர் சேர்த்துக் கலக்கினால் ருசி மிகுந்த பச்சடி ரெடி.

தக்காளி சட்னி செய்யும்போது எள்ளை வறுத்துப் பொடித்துப் போட்டு அரைத்தால் சட்னி மணம் தூக்கலாக இருப்பதோடு, ஆரோக்கியத்துக்கும் உகந்தது.

சோயா உருண்டைகளை சமையலில் பயன் படுத்தும்போது,முதலில் தேவையான தண்ணீரில் ஒரு கரண்டி பாலை விட்டு கொதிக்கவைத்து, அதில் இந்த உருண்டைகளைப் போட்டு பத்து நிமிடம் கழித்து எடுத்துக் கையால் நீரை ஒட்டப்பிழிந்து பயன் படுத்தினால் சோயா வாசனை அறவே நீங்கிவிடும்.

குருமா செய்யும்போது, தேங்காயின் அளவைக் குறைத்து பாதாம் பருப்பை சேர்த்து அரைத்தால் சத்து மிகுந்த குருமா தயார்.

logo
Kalki Online
kalkionline.com