பழங்களின் ராஜாவோடு தக்காளி, அன்னாசி கூட்டணி: நாவில் எச்சில் ஊறவைக்கும் இரு ஜாம் ரெசிபிக்கள்!

சமையல் கலையின் இரு வேறு சுவாரசியமான பக்கங்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வரும் எளிய செய்முறை விளக்கம்.
செய்முறை விளக்கம்
செய்முறை விளக்கம்AI image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

நாவூறும் இனிப்புச் சுவை கொண்ட பழங்களின் ராஜாவான மாம்பழத்தைக் கொண்டு செய்யப்படும் ‘மாம்பழ ஜாம்’ மற்றும் புளிப்பும் இனிப்பும் ஆகிய தக்காளி, அண்ணாசி பழம் கலந்த ஜாமும் எவ்வாறு செய்வது என்பதையும், அவற்றின் சுவை பற்றியும் இங்கே காண்போம்.

ஜூஸியான மாம்பழ குளோப் ஜாம் செய்ய முழுமையான செய்முறை விளக்கம்

தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழம் -1

சர்க்கரை -2 ஸ்பூன்

ஏலக்காய் -2

பால் -1/2 கப்

நெய் -1 ஸ்பூன்

ரவை -1/4 கப்

பாகு செய்ய

சர்க்கரை -1கப்

தண்ணீர் -1 1/2 கப்

ஏலக்காய் -1

செய்முறை:

முதலில் மாம்பழத்தை துண்டுகளாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் 2 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து அதில் ரவையை போட்டு வறுத்துக்கொள்ளவும்.

பின்னர் அத்துடன் அரைத்த மாம்பழ கலவையை சேர்த்து நன்கு கலந்து 3 நிமிடங்கள் மீடியமான தீயில் வேகவைத்து கெட்டியாகி வரும் போது இறக்கி ஆறவிடவும். பாகு செய்ய ஒரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும்.

பின்னர் ஆறவைத்த கலவையை சிறு உருண்டைகளாகவோ, அல்லது சிலிண்டர் வடிவிலோ உருட்டி வைத்துக்கொள்ளலாம். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் கொதித்ததும் உருட்டி வைத்த ஜாமூன்களை போட்டு மீடியமான தீயில் பொரித்து அகலமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளலாம். முழுவதும் பொரித்து முடிந்ததும் சர்க்கரை பாகை இதன் மீது ஊற்றி 2 மணி நேரம் அப்படியே மூடிவைத்து ஊறவிடவும்.

பிறகு ஜாமூன்களை எடுத்துப் பார்த்தால் சர்க்கரை பாகு நன்கு உறிந்து ஜூஸியாக சுவை மிகுந்த மாம்பழ குளோப் ஜாம்கள் ரெடியாக இருக்கும். மாம்பழ சீசனில் புதுமையான இந்த குளோப் ஜாம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

செய்முறை விளக்கம்
செய்முறை விளக்கம்AI image

புளிப்பும் இனிப்பும் கலந்த தக்காளி அன்னாசி ஜாம் செய்முறை விளக்கம்

தேவையான பொருட்கள்:

தக்காளி -2

அண்ணாசிப்பழம் -1/2 பழம் (நறுக்கியது)

வெல்லப்பொடி -5 ஸ்பூன்

ஏலக்காய் தூள் -1 ஸ்பூன்

நெய் -3 ஸ்பூன்

முந்திரி -15

செய்முறை:

முதலில் தக்காளி பழத்தை தோல் உரித்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அண்ணாசிப் பழத் துண்டுகளில் பாதியை சிறிதாக நறுக்கவும் மீதி துண்டுகளை மையாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் மசித்த தக்காளி, அரைத்த அண்ணாசிப் பழம், வெல்லப்பொடி, ஏலக்காய் தூள், நறுக்கிய அண்ணாசிப் பழத்துண்டுகள் சேர்த்து மீடியமான தீயில் வைத்து கலவை கெட்டியானதும் அதில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பையும் சேர்த்தால் தக்காளி ஜாம் ரெடி.

இதையும் படியுங்கள்:
கட்டிகள் இல்லாமல், நெய் மணத்துடன் சாஃப்ட் மைசூர்பாகு செய்ய இதோ எளிய வழிமுறை!
செய்முறை விளக்கம்

பழங்களின் இனிமையை அப்படியே அள்ளித்தரும் மாம்பழ குளோப் ஜாமும், தக்காளியின் புளிப்போடு அண்ணாசிப் பழத்தின் இனிப்பும் கலந்த புதுமையான தக்காளி ஜாமும் சமையல் கலையின் இரு வேறு சுவாரசியமான பக்கங்கள் ஆகும். வீட்டிலேயே தயாரித்து உண்பது சுவையோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும்.

நாவின் சுவை அரும்புகளை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி, நமது அன்றாட உணவுகளுக்கு ஒரு சிறந்த துணையாகவும் விளங்கும் இந்த இரு ஜாம் வகைகளும், உணவில் புதுமையை விரும்புபவர்கள் கண்டிப்பாகத் தங்களது இல்லங்களில் முயற்சி செய்ய வேண்டிய சுவைமிகுந்த தின்பண்டங்கள் என்பதில் ஐயமில்லை.

logo
Kalki Online
kalkionline.com