ஈசியா செய்ய சூப்பரான சுசியமும் - மல்பூரியும்..!

Easy  make to suzyum and malpuri..!
healthy snacks
Published on

வீட்ல ஏதேனும் விசேஷம் வந்தால் மட்டும்தான் இனிப்பு வகைகளை செய்து தருவோம். ஆனால் பிள்ளைகள் விரும்பும்போது இது போன்ற எளிதாக அதே சமயம் சத்துள்ள இனிப்பு வகைகளை செய்து தந்தால் அவர்கள் கடைகளில் இருப்பதை கேட்டு பிடிவாதம் செய்ய மாட்டார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ருசித்து சாப்பிட பாட்டி செய்த பாரம்பரியமிக்க இந்த இனிப்பு வகைகள் இனி வீட்டிலேயே செய்யுங்கள்.

சுசியம்
தேவை
:
கடலைப்பருப்பு - 2 கப்
பச்சரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் வெல்லம் - 1 கப்
தேங்காய் - 1 மூடி
ஏலக்காய் - 8
உப்பு- 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
கடலைப்பருப்பை ஊறவைத்து அரைவேக்காட்டில் வேகவைத்து தண்ணீரை வடிகட்டி பொடித்த வெல்லம், ஏலக்காய் சேர்த்து நீர் விடாமல் கெட்டியாக ஆட்டி எடுத்து வையுங்கள். தேங்காயை துருவிக் கொண்டு அதையும் கடலைப்பருப்பு விழுதில் போட்டு கலந்து தேவைப்படும் சைஸ் உருண்டைகளாக பிடித்து தட்டில் வைக்கவும்.   

பச்சரிசியையும் , உளுத்தம் பருப்பையும் நன்றாக ஊறவைத்து சிறிது உப்பு போட்டு பஜ்ஜி மாவுக்கு ஆட்டுவதுபோல் ஆட்டி அதில் பிடித்து வைத்த ஒரு கடலைப்பருப்பு உருண்டைகளை முக்கி எடுத்து கடாயில் காய வைத்த எண்ணெயில் போட்டு சிவக்க எடுக்கவும். சூப்பர் ருசியில் சத்தான சுசியம் தயார்.

மல்பூரி
தேவை:

மைதா - 2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
கெட்டித்தயிர் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
கேசரி பவுடர் - சிறிது
எண்ணெய் - பொரிக்கத் தேவையானது.

இதையும் படியுங்கள்:
இந்த அரிசி இருந்தா அடுப்பே இல்லாமல் 15 நிமிடத்தில் சோறு சமைக்கலாம் தெரியுமா?
Easy  make to suzyum and malpuri..!

செய்முறை:
மைதா மற்றும் அரிசி மாவை சிட்டிகை உப்பு, சோடா உப்பு கலந்து  கலந்து தயிர் சேர்த்து பணியார மாவுபோல் ஆகும் அளவு சிறிது நீரூற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கும்போது கேசரி பவுடர் சேர்த்து கம்பி பதமாக பாகு தயாரித்து வைத்துக் கொள்ளவும்.   

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி ஊற்றி வெந்ததும் எடுத்து சர்க்கரைப்பாகில் போட்டு நன்றாக ஊறியதும் எடுத்து தனியே வைக்கவும். இந்த மல்பூரியில் தேவைப்பட்டால் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் எண்ணெயுடன் சிறிது நெய் சேர்த்தால் உரித்தால் நெய் சேர்த்த பொரித்தால் இன்னும் நன்றாக இருக்கும். ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டைமுக்கு ஏற்ற சத்தான இனிப்பு வகைகள் ரெடி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com