
கோடைக்காலம் வந்து விட்டாலே ஜில்லென்று ஏதாவது பருகத்தான் விரும்புவோம். ஆரோக்கியத்தோடு, சுவையாகவும் எளிதாகவும் செய்ய லஸ்ஸி வகைகள் சில...
பனானா நட்ஸ் லஸ்ஸி
தேவையானவை:
கெட்டித் தயிர்-2கப், நட்ஸ்-1/4பொடித்தது. ஏலப்பொடி அல்லது சுக்குப்பொடி-2 பின்ஞ், பவுடராக்கிய சுகர்-1டேபிள் ஸ்பூன் வாழைப்பழம் -2
செய்முறை:
மிக்ஸி ஜாரில் தயிரை போட்டு விப்பரில் அடிக்கவும். பவுடர் சுகரை சேர்த்து அரிந்த வாழைப்பழத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலாக நட்ஸ் தூவி, ஏ பொடி தூவி ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
குல்கந்து லஸ்ஸி
தேவையானவை:
கெட்டித் தயிர்-2கப், குல்கந்து-1டேபிள் ஸ்பூன், அலங்கரிக்க ரோஜா இதழ், பாதாம் சீவியது-1டீஸ்பூன், பவுடராக்கிய சுகர்-1டேபிள் ஸ்பூன்
செய்முறை:
தயிரை மிக்ஸியில் நுரை வர அடித்துக்கொண்டு அதனுடன் குல்கந்து சேர்க்கவும்.சுகரை சேர்த்து நன்கு கலந்து கிளாஸில் ஊற்றி மேலாக ரோஜா இதழ், பாதாம் துருவியதை தூவி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.
வெள்ளரி, மின்ட் லஸ்ஸி
தேவையானவை:
வெள்ளரி-1 புதினா-1கைப்பிடி, தயிர்-2கப், இஞ்சித்துருவல்1/2டீஸ்பூன்,பவுடராக்கிய சுகர்-1டேபிள் ஸ்பூன்.
செய்முறை;
தயிருடன் வெள்ளரி சேர்த்து நுரை வர அடித்துக் கொள்ளவும். சுகர் சேர்த்து புதினா சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் கிளாஸில் ஊற்றி மேலாக வெள்ளரி அரிந்ததை வைத்து குளிரவைத்து பரிமாறவும்.
லஸ்ஸியை தினமும் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்
இது செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றுக்கு இதமளிக்கிறது. இதில் லாக்டோபாகிலஸ் பாக்டீரியா உள்ளது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி வயிற்று உபாதைகளை தடுக்கிறது. லஸ்ஸி அருந்துவதால் சீரான செரிமானத்துக்கு உதவுவதுடன் வயிறு நிரம்பிய உணர்வையும் தரும்
தாகத்தை தணித்து, நெஞ்செரிச்சலை குணப்படுத்தும். உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி, கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது புரோபயாட்டிக் நிறைந்த லஸ்ஸி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுவாக்கி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதை தினமும் அருந்துவதால் பல் ஆரோக்கியம் மேம்படும்.
லஸ்ஸியில் வைட்டமின் டி, லாக்டிக் அமிலம் உள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். லாக்டிக் அமிலம் சரும பாதுகாப்புக்கு உதவுகிறது. சருமத்தை சுத்தமாக்கி, கருமையை போக்குகிறது.
இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் தரும் லஸ்ஸியை கோடையில் தயாரித்து அருந்தி உடல் நலத்தை காப்போம்.