நாவில் கரையும் ரவை பால் பணியாரம் மற்றும் யாழ்ப்பாணத்து பால் புட்டு!

Jaffna milk pudding
paniyaram recipesImage credit: cookpad.com
Published on

வை உப்புமா என்றால் ஓட்டம் எடுக்கும் குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய,

ரவை பால் பணியாரம்

தேவையான பொருட்கள்:

நெய் _ 2 ஸ்பூன்

பால் _ 1 லிட்டர்

சர்க்கரை _1/2 கப்

வறுத்த ரவை _ ½ கப்

பாதாம் _3 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன்

மஞ்சள்தூள் _1 சிட்டிகை

எண்ணெய் _ பொரிக்க தேவையானது

செய்முறை: ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் ¼ லிட்டர் பால் ஊற்றி அத்துடன்  1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து தீயை அதிகமாக வைத்து பால் கொதித்ததும் தீயை குறைத்து வைத்துக்கொண்டு வறுத்த ரவையை சேர்த்து நன்கு கலந்து விடவும். கை விடாமல் கிளறி கொண்டிருக்கும் போது ரவை உருண்டு திரண்டு வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து ¾ லிட்டர் பால் சேர்த்து அத்துடன் ½ கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடவும். பால் நன்கு கொதித்து வந்ததும் தீயை குறைத்து வைத்துக்கொள்ளவும் அத்துடன் பொடியாக நறுக்கிய பாதாம் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் கொதித்ததும் ஏலக்காய் தூள் மற்றும் மஞ்சள்தூள் கலந்து இறக்கி வைக்கவும். பின்னர் பாலில் வேகவைத்த மாவில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு மிருதுவாகும் வரை பிசைந்து  உருட்டி விடவும்.

பின்னர் சிறு சிறு உருண்டை களாக உருட்டி வைக்கவும். பின்னர் அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை பொன் நிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும். பின் பொரித்த உருண்டைகளை காய்த்துவைத்த பாலுடன் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கலாம். மிகவும் சுவையான ரவை பால் பணியாரம் தயார்

யாழ்பாணத்து பால் புட்டு

தேவையான பொருட்கள்:

வறுத்த அரிசி மாவு _300 கிராம்

வறுத்த உளுந்தமாவு _100 கிராம்

உப்பு _½ டீஸ்பூன்

தேங்காய் பால் _800 மில்லி

நாட்டு சர்க்கரை _200 கிராம்

இதையும் படியுங்கள்:
'சத் பூஜை' (Chhath Puja) ஸ்பெஷல் தெக்குவா ஸ்வீட் ரெசிபி!
Jaffna milk pudding

செய்முறை: அரிசி மாவு, உளுந்தமாவு, ¼ ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதித்த வெந்நீர் சிறிது சிறிதாக விட்டு குழைத்து பிட்டுக்கு மாவு விரவுவதுபோல உருண்டைகள் இல்லாமல் கொத்தி, கொத்தி உதிரியாக்கி இட்லி பானையில் தட்டில் வைத்து ஆவியில் 8 நிமிடங்கள் வேக விட்டு பின்னர் அந்த மாவை உதிர்த்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வைத்து அத்துடன் ½ கப் நாட்டு சர்க்கரை, ¼ ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி பால் நன்கு கொதித்ததும் உதிர்த்து வைத்த புட்டுடை சேர்க்கவும். சிறு தீயில் ஒரு நிமிடம் வைத்து கிளறி இறக்கினால் சிறிது நேரத்திற்கு பிறகு இறுகி விடும். பிறகு நன்கு கிளறி பரிமாறலாம். சுவையான பால் புட்டு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com