ஈஸியா செய்யலாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு அல்வா- அசோகா அல்வா!

சர்க்கரை வள்ளிக் கிழங்கு அல்வா
சர்க்கரை வள்ளிக் கிழங்கு அல்வாwww.youtube.com
Published on

தேவை:

ர்க்கரை வள்ளிக் கிழங்கு - 4 தேங்காய் துருவல் - 2 கப், வெல்லம் - 1 கப், ஏலப்பொடி, சுக்குப் பொடி - தலா 1/4 டீஸ்பூன், நெய் - தேவைக்கு, முந்திரி பருப்பு - 4, உப்பு – சிட்டிகை.

செய்முறை:

ர்க்கரை வள்ளிக் கிழங்கை நன்கு வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். வெல்லத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேங்காய் துருவலோடு சேர்த்து, ஏலப்பொடி, சுக்குப்பொடி சேர்த்து பூரணம் மாதிரி கிளறவும். அதில் மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து நன்கு கிளறி சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பு போட்டு கலந்து இறக்கவும். சத்தான சுவையான அல்வா ரெடி.

அசோகா அல்வா!

தேவை:

கோதுமை மாவு - 1/2 கப், சர்க்கரை - 2 1/2 கப், சிறு துண்டுகளாக்கிய பாதாம் - 2 டீஸ்பூன், ஏலப்பொடி - 1 சிட்டிகை, உப்பு - சிட்டிகை, நெய் - தேவைக்கு.

அசோகா அல்வா!
அசோகா அல்வா!www.youtube.com

செய்முறை:

குக்கரில் பாசிப்பருப்பை போட்டு நீர் விட்டு நன்கு குழைய வேகவைத்து மசிக்கவும். இது சூடாக இருக்கும் போதே பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வாணலியில் நெய்விட்டு பாதாம் பருப்பை வறுத்து எடுக்கவும். அதில் கோதுமை மாவை சிறுதீயில்  வாசனை வரும் வரைவறுத்து எடுத்து அதில் பாசிப் பருப்பு, சர்க்கரை கலவையை சேர்த்து நன்கு கிளறி, சிட்டிகை உப்பு, ஏலப்பொடி சேர்த்து நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
டாமரில்லோவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சர்க்கரை வள்ளிக் கிழங்கு அல்வா

புரதச் சத்து நிறைந்த ருசியான அசோகா அல்வா தயார். சாப்பிட ருசி அள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com