மொறு மொறு மத்தூர் வடை செய்வது இவ்வளவு ஈசியா?

மத்தூர் வடை
மத்தூர் வடை

சிற்றுண்டியில் ஸ்பெஷல் என்றால் எல்லா நகரங்களிலும் வடை தான் முதன்மையாக இருக்கும். பெங்களூரில் இருந்து மைசூர் வரையிலான ரயில் பயணம் மத்தூர் வடை இல்லாமல் முழுமையடையாது. பெங்களூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய நகரம் மத்தூர். இது பெங்களூர் மற்றும் மைசூர் இடையே உள்ளது. இந்த ஊர்  சுவையான வடைகளுக்கு பிரபலமானது. மத்தூர் வடை நூறு ஆண்டுகள் பழமையான சிற்றுண்டி மற்றும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது என்கின்றனர். கன்னட ஸ்பெஷலான இந்த மொறு மொறு மத்தூர் வடை செய்வோமா?

தேவை:
ரவை - ஒரு கப், மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், பெரிய வெங்காயம் - 2 , வேர்க்கடலை - 2 ஸ்பூன், வெள்ளை எள் - 1 ஸ்பூன் , மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன் , இஞ்சி - சிறிது, பச்சை மிளகாய்- 3 , பெருங்காயத்தூள் - சிறிது உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:
ரவை, சலித்த மைதா, அரிசி மாவு மூன்றினையும்  துருவிய தேங்காயுடன் கலந்து  உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சிறிதளவு எண்ணெய், வெள்ளை எள், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். அதனுடன் மிதமாக வறுத்து தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் நன்கு காய்ந்த எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் நீங்கள் விரைவாக முன்னேற உதவும் 7 உத்திகள்!
மத்தூர் வடை

பின் அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வடை பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். கலந்த மாவை சற்று பெரிய உருண்டைகளாக பிடித்து வாழையிலையில் எண்ணெய் தடவி ஒவ்வொன்றையும் தட்டையைப் போல் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு- குறைந்த தீயில் சில நிமிடங்களுக்கு திருப்பி திருப்பிப் போட்டு வடையை வறுக்கவும். அப்போதுதான் மத்தூர் வடை மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். அதில் சேர்த்திருக்கும் வெங்காயம், வேர்கடலை, எள் போன்றவைகள் கருகாமல் எடுக்க வேண்டிடது முக்கியம்.அதே போல் எள்ளுக்கு பதில் சீரகமும் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com