வாழ்க்கையில் நீங்கள் விரைவாக முன்னேற உதவும் 7 உத்திகள்!

motivation Image
motivation ImageImage credit - pixabay.com

னிதன் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறுகளில் ஒன்று தங்களைக் குறைத்து மதிப்பிடுவதுதான். எப்போதும் பிறரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொண்டே இருக்க முயற்சி செய்கிறார்கள் மனிதர்கள். மற்றவர் களின் பார்வையில் தான் சிறந்தவராகத் தெரிய வேண்டும் என்று எப்போதும் மெனக்கெடுபவர்கள் பலர். அதனால் தன்னைத் தானே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு தங்கள் முன்னேற்றத்தை தானே தடுத்துக் கொள்கின்றனர். அந்தப் பழக்கத்தை மாற்றி விரைவாக முன்னேறுவது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

1. பொதுவாக யாராவது ஒருவர் நடக்கும்போது கீழே விழுந்து விட்டால் அவருக்கு அடிபட்டு வலித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் எழுந்து நின்று யாராவது அந்த காட்சியை கண்டிருப்பார்களா என்று தான் கவலைப்படுவார். அந்த அளவுக்கு தன்னுடைய வலியையும் வேதனையையும் பொருட்படுத்தாமல் பிறரின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் தான் முக்கியத்துவம் தருகிறோம் என்பது வேடிக்கையான உண்மை. தனக்கு எது சரி என்று படுகிறதோ அதன்படி நடப்பது தான்  புத்திசாலித்தனம். பிறரை திருப்திப்படுத்துவது நமது வாழ்வின் நோக்கம் அல்ல. 

2. தொடர்ந்து நம்மைத் திருத்திக் கொள்ள முயல்வதற்குப் பதிலாக, ஒருவர் தன்னை தன் பலம், பலவீனத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே தனிப்பட்ட வளர்ச்சிக்கு மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும். நேர்மையாக தன்னை ஒருவர் வெளிப்படுத்துவதன் மூலம் தனது தொடர்புகளை ஆழப்படுத்தி அதிகமான நண்பர் களையும் உறவுகளையும் பெற முடியும்.  நம்மை அப்படியே ஏற்றுக்கொள்வது அதிக தன்னம்பிக்கை மற்றும் உள் அமைதிக்கு வழிவகுக்கும். உண்மையான சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் நாம் அனுபவிக்க முடியும்.

3. நம்மை நாமே கடுமையாக விமர்சிக்கும் போக்கு நம்மில் பலருக்கு உள்ளது. சுயவிமர்சனத்தை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக சுய இரக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கருணை மற்றும் புரிதலுடன் நம்மை நடத்துவதன் மூலம், நாம் இன்னும் நேர்மறையான சுய-பிம்பத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

4. உள்ளார்ந்த நிறைவில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய வேகமான உலகில் பணம், பொருள், ஆடம்பர வாழ்க்கை, அறிவியல் சாதனங்கள் மற்றும் உடைமைகளில் சிக்கிக் கொள்வது எளிது. ஆனால் உண்மையான நிறைவு மனதிற்குள் இருந்து  வருகிறது. மகிழ்ச்சி மற்றும் மனநிறைவின் உண்மையான ஆதாரங்களான அன்பு, இரக்கம் மற்றும் நன்றியுணர்வு போன்ற உள் குணங்களில் கவனம் செலுத்த வேண்டும்

5. மற்றவர்களுடன் நம்மைத் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பது, போதாமை மற்றும் குறைந்த சுயமரியாதை உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.  யாருடைய மதிப்பையும் மதிப்பிட வேண்டிய அவசியமில்லை. நம் சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உட்பட நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்பு கிறோம். ஆனால் நம்மால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. நாம் கட்டுப்படுத்தக்கூடியது நமது சொந்த எதிர்வினைகள் மட்டுமே.

இதையும் படியுங்கள்:
ஆடை மற்றும் அணிகலன்கள் நழுவாமல் ‘நச்’ என்று இருக்க இந்த ஃபேஷன் டேப் பெஸ்ட்!
motivation Image

6. பெரும்பாலும், கடந்த காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படுவதில் நாம் சிக்கிக் கொள்கிறோம்.  உண்மையில் இருக்கும் ஒரே கணம் தற்போதைய தருணம். கடந்த காலம் போய்விட்டது, எதிர்காலம் இன்னும் வரவில்லை. தற்போதைய தருணத்தில் நாம் கவனம் செலுத்தும்போது, ​​கடந்த காலத்தின் வருத்தங்கள் மற்றும் எதிர்காலத்தின் கவலைகள் ஆகியவற்றிலிருந்து நாம் விடுபடுகிறோம்.

7. ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு அவர் தன்னை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆரோக்கிய மான உடலுக்கு தேவையான உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு நினைவாற்றல் போன்றவற்றை சரிவர கவனிக்க வேண்டும். தன்னுடைய வளர்ச்சிக்கும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் தேவையான இலக்குகளை அமைத்து  சரியான திட்டங்கள் தீட்டி அவற்றை செயல்படுத்தி வாழ்வில் எளிதாக முன்னேற முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com