ஈஸியா செய்யலாம் மொறு மொறு ரெடிமேட் தக்காளி ரவா தோசை!

தக்காளி ரவா தோசை...
தக்காளி ரவா தோசை...

ந்தியாவில் பரவலாக ருசிக்கப்படும் தோசை, இட்லி போன்ற உணவு வகைகளுக்கு உலக அளவில் வரவேற்பு  பெருகி வருகிறது. வெளிநாட்டினரும் இங்கே உள்ள  உணவு வகைகளை விரும்பி ருசிக்கிறார்கள். அதில் உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் போதிய அளவில் கலந்திருப்பதோடு சுவையும் அமோகமாக இருப்பதாக புகழ்கிறார்கள். உலக உணவில் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் தென்னிந்தியாவின் தோசை முக்கிய இடம் பெற்றுள்ளது.

அரிசி, உளுந்து ஊறவைத்து ஆட்டி புளிக்க வைத்து என ஒருநாள் தேவைப்படும் தோசைக்கு மாற்றாக ரெடிமேட்  தோசைகள் தற்போது செய்கிறார்கள். அதில் ஈஸியா செய்யக்கூடிய தக்காளி ரவா தோசை செய்முறையை இங்கு காணலாம்.

தேவையானவை:
பழுத்த தக்காளிகள் -6
வரமிளகாய் - 4
பச்சரிசி மாவு - ஒரு கப்
ரவை -அரை கப்
மைதா - 2 டே.ஸ்பூன்
மிளகு சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு -தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
கணையத்தின் ஆரோக்கியம் காக்கும் பன்னிரண்டு வகை  உணவுகள்!
தக்காளி ரவா தோசை...

செய்முறை:
வையை மிளகு, சீரகம், வரமிளகாய் போட்டு சற்று புனிதமான சூட்டில் வறுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்து பச்சரிசி மாவுடன் தேவையான நீரூற்றி நன்கு கலந்து வைக்கவும். தக்காளிகளை நன்கு கழுவி மிக்ஸியில் அடித்து (தேவைப்பட்டால் விதைகளை வடிகட்டி) பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து தோசை சட்டியில் சுழற்றி ஊற்றும் அளவுக்கு நீர்க்க கரைத்துக் கொள்ளவும். தோசை தவாவை அதிகமான தீயில் வைக்காமல் காய்ந்ததும் இந்த தோசைகளை ஊற்றி சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு இருபக்கமும் சிவந்ததும் எடுக்கலாம். மொறுமொறுவென்று குழந்தைகள் சாப்பிட ஏற்ற ரெடிமேட்  தக்காளி ரவா தோசை இது. இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டியான தேங்காய் அதிகம் போட்ட சட்னி சூப்பர் காம்பினேஷன்.

குறிப்பு - தேவைப்பட்டால் இதற்கு கடுகு ,கருவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம் தாளித்து கொட்டலாம். அவ்வப்போது மாவைக் கலந்து விட்டு ஊற்ற வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com