கணையத்தின் ஆரோக்கியம் காக்கும் பன்னிரண்டு வகை  உணவுகள்!

Twelve types of foods that keep the pancreas healthy!
Twelve types of foods that keep the pancreas healthy!MattL_Images

ணையம் (Pancreas) என்பது நம் உடலின் முக்கியமான உள்ளுறுப்புகளில் ஒன்று. இதிலிருந்து சுரக்கும் ஹார்மோன் மற்றும் என்ஸைம்கள், நாம் உட்கொள்ளும் உணவுகளிலுள்ள புரோட்டீன், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஜீரணிக்கக் கடினமான பொருட்களை உடைத்து ஜீரணம் எளிதாக நடைபெறவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவி புரிகின்றன.

கணையம் ஆரோக்கியமாக செயல்பட நாம் உண்ண வேண்டிய பன்னிரண்டு உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சல்ஃபர், செலீனியம், ஃபிளவனாய்ட் போன்ற சத்துக்கள் நிறைந்த பூண்டு சாப்பிடும்போது கணையப் புற்றுநோய் வரும் அபாயம் குறைகிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்ட பொருள் கணையம் ஆரோக்கியமுடன் இயங்க உதவுகிறது.

செர்ரி பழங்களிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கணையத்தில் கோளாறுகள் ஏதும் உண்டாகாமல் பாதுகாக்கின்றன.

முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலே, பிரஸ்ஸல் ஸ்பிரௌட்ஸ் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்கறிகளில் கேன்சரை பரவச் செய்யும் செல்களை எதிர்த்துப் போராடும் குணம் அதிகமுள்ளது. இது கேன்சர் வரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்துகிறது.

ஸ்வீட் பொட்டட்டோவில் B Complex வைட்டமின்கள், வைட்டமின் C, காப்பர், மக்னீஸியம், பீட்டா கரோட்டீன் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை கணையப் புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகின்றன.

புரோபயோட்டிக் யோகர்ட்டானது ஜீரண மண்டலத்தின் சிறப்பான இயக்கத்திற்கு உதவுகிறது. மேலும், கணையத்தின் செயல்பாடுகளில் எவ்வித குறைபாடும் உண்டாகாமல் பாதுகாக்கிறது.

காளான்களில், குறிப்பாக ரெய்ஷி மற்றும் ஷீடேக் (Reishi & Shiitake) வகைகளில் நார்ச்சத்து, செலீனியம், வைட்டமின் D2 மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டுள்ளதால் கணையத்தில் எவ்வித வீக்கமும் உண்டாகாமல் ஆரோக்கியம் பெற உதவி புரிகின்றன.

பசலை, காலே, கொலார்டு மற்றும் புரோக்கோலி போன்ற இலைக் காய்கறிகளில் கேன்சர் செல் வளர்ச்சியைத் தடுக்கும் குணம் உண்டு. இவை கணையப் புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
மற்றவருக்காக இல்லாவிட்டாலும் செய்யும் வேலைக்கு உண்மையாக இருங்கள்!
Twelve types of foods that keep the pancreas healthy!

ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ள சிவப்பு க்ரேப் பழத்தில் ரெஸ்வெரேட்ரல் (Resveratrol) என்ற ஃபைடோகெமிக்கல் உள்ளது. இதுவும் ஆன்டி கேன்சர் குணம் கொண்டது. எனவே இதை உண்பதாலும் கணைய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

ஓட்ஸ், குயினோவா, பிரவுன் ரைஸ் போன்றவை ஆன்டி ஆக்சிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகளவு கொண்டவை. இவற்றை உண்பதால் கணையத்தில் கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் காக்க முடியும்.

க்ரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி கேன்சர் குணங்கள் அதிகம். இவை பான்கிரியாட்டிடிஸ் என்ற நோய் வராமல் தடுக்கவல்லவை. பெரி வகைப் பழங்களும் செல் சிதைவைத் தடுத்து கணையத்தைக் காக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com