சிக்கன வெஜிடபிள் & ஹெல்தியான பருப்பு சூப்புகள்!

healthy variety soups...
soup recipesimage credit - pixabay
Published on

குளிருக்கும் மழைக்கும்  தொண்டையை  இதமாக்கும்  சூப் வகைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சூப் என்பது முதன்மையான திரவ உணவாகும். பொதுவாக சூடாக அருந்துவதே நல்லது. இது இறைச்சி அல்லது காய்கறிகளின் பொருட்களை சேர்த்து  தயாரிக்கப் படுகிறது. பெரும்பாலான சூப்களில் வறுத்த ரொட்டித் துண்டுகள் பயன்படுத்தப்படுகிறது.

சூப்பில் பலவிதங்கள் உண்டு. அதில் இந்த சிக்கன வெஜிடபிள் சூப், பருப்பு சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம் அது என்ன சிக்கன வெஜிடபிள் சூப்? இந்த சூப்பிற்கு நம் வீட்டில் இருக்கும் மீந்து போன காய்கறிகளே போதும். அதுமட்டுமல்லாமல் காய்கறிகளின் ஓரப்பகுதிகள், காம்பு பகுதிகளையும் இதில் உபயோகிக்கலாம். உதாரணமாக காலிஃப்ளவரின் நடுத்தண்டு, பூக்கள் உள்ள தண்டுகள், நூக்கல் போன்றவற்றின் நுனிப்பகுதி, பச்சை பட்டாணி தோல், வெண்டைக்காயின் காம்புகள் போன்றவற்றை இந்த சூப்பில் சேர்க்கலாம் என்பதால்தான் இதற்கு சிக்கன சூப் என்று பெயர். எப்படி செய்வது எனப் பார்ப்போம்.


சிக்கன வெஜிடபிள் சூப்:
தேவை
தக்காளி - 6
கேரட் - 2
பால் - ஒரு சிறிய கப் ( தேவைப்பட்டால்)
வெங்காயம் -2
பூண்டு- 4 பற்கள்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
மிளகு தூள்- தேவையானது
கொத்தமல்லித்தழை - தேவைக்கு
மிகுந்த அல்லது விரும்பும் காய்கறிகளின் பாகங்கள்- 1 கப்
எண்ணெய் அல்லது வெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
வெங்காயம் தக்காளி, கேரட் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளைப்பூண்டு அம்மியில் நசுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியில் எண்ணெய்விட்டு எண்ணெய் அல்லது வெண்ணெய்விட்டு நறுக்கிய லேசாக வெங்காயத்தை வதக்கவும். அத்துடன் நசுக்கிய பூண்டு மற்றும் மைதா மாவையும் சேர்த்து நன்கு வதக்கவும். மைதா அடிப்பிடிக்காமல் அடுப்பை  மிதமாக வைத்து கிளறவும் அதனுடன் கழுவி சுத்தம் செய்த காய்கறி பகுதிகள் நறுக்கிய தக்காளி, கேரட், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இப்போது ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். காய்கள் நன்றாக வெந்ததும் வடிகட்டி மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய  கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறுங்கள்.

பருப்பு சூப்:

தேவை:
வேகவைத்த துவரம் பருப்பு - 2 கப் சதுரமாக நறுக்கிய ரொட்டி துண்டுகள்- 1//2 கப், வேகவைத்த காய்கறிகள்- ஒரு கப் துருவிய சீஸ் - 3  டேபிள் ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
ஊற வைத்த கொத்தமல்லி விதையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
healthy variety soups...

செய்முறை:
பருப்பை நன்றாக வேகவைத்து  கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கடைந்து விருப்பமான காய்கறிகளை சேர்த்து வேகவைக்கவும். பருப்பு வேகவைக்கும் போதே தண்ணீர் அதிகம் சேர்க்கவும். நன்றாக வெந்தபின் வடிகட்டி துருவிய சீஸ் மற்றும் நெய்யில் வறுத்த ரொட்டித் துண்டுகளை சேர்த்து விருப்பத்திற்கு ஏற்ப உப்பு மிளகுத்தூளை சேர்த்து பரிமாறலாம். இது செய்வதற்கும் எளிது புரோட்டின் சத்தும் நிறைந்து நலம் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com