Chocolate Fudge Cake
Chocolate Fudge Cake

Chocolate Fudge Cake: முட்டை இல்லாத சாக்லேட் கேக்.. வேற லெவல் டேஸ்ட்! 

பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும், ஈரப்பதம் நிறைந்த சுவையான சாக்லேட் ஃபட்ஜ் கேக்கை சாப்பிடும் போதே உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதன் வெல்வெட் அமைப்பு மற்றும் சாக்லேட் சுவை வாயில் வைக்கும் போதே கரையும் படியாக இருக்கும். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். நீங்கள் முற்றிலும் வித்தியாசமான சுவையுள்ள கேக் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் இதுதான் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். 

தேவையான பொருட்கள்: 

  • 2 கப் மைதா மாவு 

  • 2 கப் சர்க்கரை 

  • ¾ கோக்கோ பவுடர்

  • 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர் 

  • 1 ஸ்பூன் பேக்கிங் சோடா 

  • 1 ஸ்பூன் உப்பு 

  • 1 கப் பால் 

  • ½ கப் எண்ணெய் 

  • 2 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் 

  • 1 கப் வெந்நீர்

Fudge தயாரிக்க: 

  • 1½ கப் Hard கிரீம்

  • 1½ டார்க் சாக்லேட் சிப்ஸ்

  • 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

செய்முறை: 

முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ளுங்கள். பின்னர் அதில் பால், எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். 

பின்னர் மைக்ரோவேவ் அவனில் வைப்பதற்கு பாதுகாப்பான கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் லேசாக எண்ணெய் தடவுங்கள். பின்னர் தயாரித்த மாவை அதில் ஊற்றி சமமாகப் பரப்பவும். 

இதையும் படியுங்கள்:
Morning Habits: உடனடியாக கைவிட வேண்டிய 5 தவறுகள் - ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டி!
Chocolate Fudge Cake

இந்த கலவையை மைக்ரோவேவ் அவனில் வைத்து மூன்று நிமிடங்கள் அதிக வெப்பத்தில் வேக வைக்கவும். பின்னர் வெளியே எடுத்து நடுவில் ஒரு குச்சியை வைத்து குத்திப் பாருங்கள். மாவு குச்சியில் ஒட்டவில்லை என்றால் கேக் தயாராகிவிட்டது என அர்த்தம். இல்லையல் மேலும் 30 வினாடிகளுக்கு வேக வைக்கவும். கேக் வெந்ததும் அதை தனியாக வெளியே எடுத்து ஆறவையுங்கள். 

அடுத்ததாக க்ரீம் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சூடானதும் சாக்லேட் துண்டுகளை சேர்த்து அவை உருகும் வரை கிளறவும். பின்னர் இந்த கலவையை அப்படியே எடுத்து கேக்கின் மேல் ஊற்றி சமமாகப் பரப்பி விடுங்கள். இறுதியாக மேலே தடவிய கிரீம் கொஞ்சம் கெட்டியாகும் வரை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சூப்பரான சாக்லேட் ஃபட்ஜ் கேக் தயார். 

logo
Kalki Online
kalkionline.com