சூப்பர் சுவையில் முட்டையில்லாத வெஜ் மயோனைஸ்!

Eggless veg mayonnaise.
Eggless veg mayonnaise.

மயோனைஸ் என்றாலே அதை முட்டை சேர்த்து மட்டும்தான் செய்ய வேண்டுமா என்ன? சைவப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் முட்டை சேர்க்காமலும் செய்யலாம். ஒரு சிறந்த வெஜ் மயோனைஸ் தயாரிக்க இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள். இதை தயாரிப்பது சிரமமற்றது, மற்றும் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து செய்ய முடியும். கடைகளில் தயாரிக்கும் மயோனைஸ் எப்படி செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இதை நாம் வீட்டிலேயே செய்யும்போது ஆரோக்கியமானதாக இருக்கும். 

தேவையான பொருட்கள்

பால் - ½ கப்

ரீஃபைண்ட் ஆயில் - ½ கப்

உப்பு - ½ ஸ்பூன் 

சர்க்கரை - ½ ஸ்பூன் 

வினிகர் - 1 ஸ்பூன் 

கடுகு - 1 ஸ்பூன் 

செய்முறை

முதலில் பால், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை பிளெண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து 30 வினாடிகள் அதிவேகமாக கலக்கவும். பின்னர் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதிவேகமாக 10 செகண்ட் மிக்ஸியை ஆன் செய்து நிறுத்தவும். 

பிறகு மேலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் அதே போல 10 செகண்ட் அதிவேகத்தில் மிக்ஸியை ஆன் செய்து நிறுத்தவும். இதே போல 10 முறை எண்ணெயை சேர்த்து கெட்டியாகும் வரை செய்யவும். இறுதியில் கடுகுத்தூள் மற்றும் வினிகர் சேர்த்து கெட்டியாகன பதத்திற்கு வரும்வரை மிக்ஸியை ஓட விடுங்கள். 

அவ்வளவுதான் சூப்பர் சுவையில் முட்டை இல்லாத வெஜ் மையோனைஸ் கொஞ்ச நேரத்தில் தயார். இதன் சுவை நீங்கள் எதிர்பார்ப்பதைப் போலவே இருக்கும். 

இதையும் படியுங்கள்:
சுவையான வெஜ் மோமோஸ் செய்வோமா?
Eggless veg mayonnaise.

குறிப்புகள்

  • மிக்ஸியை ஒரே நேரத்தில் அதிக நேரம் இயக்கக் கூடாது. அப்படி செய்தால் மையோனைஸ் நீர்த்திவிடும். 

  • ஒரேயடியாக எண்ணெயை சேர்க்காமல், கொஞ்சம் கொஞ்சமாக கால இடைவெளி விட்டு எண்ணெய் சேர்த்து கலக்கினால் மட்டுமே, மயோனைஸ் கெட்டியாக கிடைக்கும். 

  • உங்களிடம் வினிகர் இல்லையென்றால் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். 

  • நீங்கள் தயாரித்து முடித்ததும், மையோனைஸ் இலகுவாக இருப்பது போல் உணர்ந்தால், அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் கெட்டியாக மாறும். 

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, வெஜ் மையோனைஸ் செய்து பார்த்து அது எப்படி இருந்தது என மறவாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com