சுவையான வெஜ் மோமோஸ் செய்வோமா?

சுவையான வெஜ் மோமோஸ் செய்வோமா?

தேவையான பொருட்கள்:


மைதா - 1 1/2 கப்

உப்பு - 1 ஸ்பூன்

எண்ணெய் - 2 ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழது - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 1ஸ்பூன்

கோஸ் துருவல் - 1கப்

கேரட் துருவல் - 1கப்

சோயா சிரப் - 1ஸ்பூன்

கொத்தமல்லி தழை - 1/2கப்

செய்முறை :

ரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும்  எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி,  நறுக்கி வைத்துள்ள கோஸ் துருவல், கேரட் துருவல், மிளகாய் தூள், சோயா சிரப் சேர்த்து பாதியளவு வேகவைக்கவும். கொத்தமல்லியை போட்டு கிளறி இறக்கி தனியாக வைக்கவும்.

பிறகு ஊற வைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அதை, சப்பாத்தி கட்டையில் சிறிய சப்பாத்தி அளவிற்கு தேய்த்து, அதில் வேகவைத்துள்ள மசாலா கலவையை வைத்து சிறிது சிறிதாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து, வேகவைத்து எடுக்கணும். 


சுவையான வெஜ் மோமோஸ் ரெடி! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com