
கத்தரிக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
நீளமான பெரிய பச்சை கத்திரிக்காய் -ஒன்று
சுத்தம் செய்த பலாக்கொட்டைகள்- ஆறு
நறுக்கிய பெரிய வெங்காயம்- ஒன்று
நறுக்கிய தக்காளி- ஒன்று
புளிக்கரைசல் -ஒரு டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி -2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ,கசகசா ,மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து அரைத்த பேஸ்ட்- ஒரு டீஸ்பூன்
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் -ஒரு டேபிள் ஸ்பூன்
பாதாம், முந்திரி தலா -நான்கு
பொட்டுக்கடலை- ஒரு டீஸ்பூன்
எண்ணெய் ,உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரைக்க கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, சோம்பு தாளிக்கவும். அடுத்து உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து வறுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி சாம்பார் பொடி, சேர்த்து நன்றாக கிளறி பலாக்கொட்டை மற்றும் கத்தரிக்கையும் ஒரு புரட்டிவிட்டு உப்பு, புளி சேர்த்து நன்கு வேகவிடவும் . முக்கால் திட்டம் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு தனியா தூவி இறக்கவும். பிரியாணி, புலாவ், வெஜிடபிள் ரைஸ் போன்ற வற்றிற்கு நல்ல சைடு டிஷ் இது.
வெஜிடபிள் ரைஸ்:
செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி -ஒரு டம்ளர்
உருளைக்கிழங்கு நறுக்கியது- ஒன்று
வெங்காயம் நறுக்கியது -ஒன்று
தக்காளி நறுக்கியது -ஒன்று
லெமன் ஜூஸ் -சிறிதளவு
கேரட் நறுக்கியது -ஒன்று
பீன்ஸ் நறுக்கியது -அரை கப்
பலாக்கொட்டை நறுக்கியது -ஆறு
புதினா, தனியா, கருவேப்பிலை- பொடியாக அரிந்தது இரண்டு கைப்பிடி அளவு
சாம்பார் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு ,கிராம்பு, ஏலக்காய், சோம்பு எல்லாம் சேர்த்து அரைத்த பேஸ்ட் -ஒரு டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய், நெய்- தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் தாராளமாக எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகளை சேர்த்து வதக்கி அரிசியுடன் சாம்பார்பொடி சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு தனியா, புதினா, கறிவேப்பிலை சேர்த்து கிளறி வேகவிடவும். 7 நிமிடத்தில் 3 விசில் வரவும் குக்கரை நிறுத்தி நெய், எலுமிச்சைசாறு சேர்த்துக்கிளறி ,கத்திரிக்காய் கிரேவியை சேர்த்து பரிமாறி சாப்பிடவும். வெளியில் பயணம் செய்யும்பொழுது இதை எடுத்துச் சென்று சாப்பிட வசதியாக இருக்கும்.