வேற லெவல் டேஸ்டான ‘கத்தல் கட்லெட்’ செய்யலாம் வாங்க! 

Kathal Cutlet
Kathal Cutlet
Published on

இன்னைக்கு நாம பார்க்க போற ரெசிபி கொஞ்சம் ஸ்பெஷலானது. சைவம் சாப்பிடுறவங்களுக்கும், காய்கறிலயே ஒரு நான்-வெஜ் ஃபீல் வேணும்னு நினைக்கிறவங்களுக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம்ன்னா அது பலாக்காய் (கத்தல்) தான். இந்த பலாக்காய வச்சு ஒரு சூப்பரான கட்லெட் எப்படி செய்யுறதுன்னு தான் பார்க்க போறோம். இதோட டேஸ்டும் டெக்ஸ்சரும் நிஜமாவே ஆச்சரியப்படுத்தும். வாங்க, இந்த கதல் கட்லெட் எப்படி செய்யுறதுன்னு ஈஸியா பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பிஞ்சு பலாக்காய் (கத்தல்) - ஒரு சின்ன துண்டு

  • உருளைக்கிழங்கு - 1

  • வெங்காயம் - 1

  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

  • மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்

  • கரம் மசாலா - கால் டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

  • பிரெட் தூள் (Breadcrumbs) - கால் கப்

  • கடலை மாவு அல்லது சோள மாவு - 2 டீஸ்பூன் 

  • கொத்தமல்லி இலை - கொஞ்சம்

  • எண்ணெய் - பொரிக்கிறதுக்கு தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதல்ல நறுக்கின பலாக்காயை குக்கர்ல போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா வேக வச்சுக்கோங்க. ரெண்டு இல்ல மூணு விசில் வந்தா போதும். வெந்ததும் தண்ணிய வடிகட்டிட்டு பலாக்காயை நல்லா மசிச்சு எடுத்துக்கோங்க. அதுல நார் மாதிரி இருக்கும் அதெல்லாம் எடுத்துடுங்க. மசிச்ச உருளைக்கிழங்கையும் இது கூட சேர்த்துக்கோங்க.

இப்போ ஒரு கடாயில கொஞ்சமா எண்ணெய் ஊத்தி சூடானதும் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வதக்குங்க. வெங்காயம் வதங்கினதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போற வரைக்கும் வதக்குங்க.

அடுத்து மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் எல்லாத்தையும் போட்டு ஒரு நிமிஷம் வதக்குங்க. இப்போ வதக்கின இந்த மசாலாவ மசிச்சு வச்ச பலாக்காய் உருளைக்கிழங்கு கலவையில சேருங்க.

அது கூடவே கடலை மாவு இல்லன்னா சோள மாவு, நறுக்கின கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, உள்ள சேர்க்குறதுக்கு வச்ச பிரெட் தூள் எல்லாத்தையும் போட்டு நல்லா கையால பிசைஞ்சுக்கோங்க. மாவு கொஞ்சம் கூட ஈரப்பதம் இல்லாம கெட்டியா இருக்கணும்.

பிசைஞ்ச மாவுல இருந்து சின்ன சின்ன உருண்டைகளா எடுத்து உங்களுக்கு பிடிச்ச ஷேப்ல கட்லெட்டா தட்டிக்கோங்க. இப்போ ஒரு தட்டுல மீதி இருக்க பிரெட் தூளை பரப்பி வச்சுட்டு, தட்டி வச்ச கட்லெட்ட எடுத்து பிரெட் தூள்ல எல்லா பக்கமும் புரட்டி எடுங்க.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் வழியும் முகம் உங்கள் அழகை கெடுக்கின்றதா?
Kathal Cutlet

அடுப்புல தோசைக்கல் இல்லன்னா ஒரு கடாய வச்சு எண்ணெய் ஊத்தி சூடானதும் கட்லெட்ஸ போட்டு ரெண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமா, மொறுமொறுப்பா ஆகுற வரைக்கும் பொரிச்சு எடுங்க. மிதமான தீயில பொரிங்க அப்பதான் உள்ளயும் நல்லா வேகும்.

அவ்வளவு தான் மக்களே… சூப்பரான, டேஸ்டியான கத்தல் கட்லெட் ரெடி. இத அப்படியே ஸ்நாக்ஸா சாப்பிடலாம் இல்லன்னா டொமேட்டோ கெட்சப், புதினா சட்னி கூட வச்சு சாப்பிடலாம். வெளியில மொறுமொறுன்னு உள்ள சாஃப்டா இருக்கும். கண்டிப்பா உங்க எல்லாருக்கும் இது ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன். நீங்களும் உங்க வீட்ல இந்த கதல் கட்லெட்ட செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
இனிப்பான மாம்பழ கேசரி - நேந்திரம் பழக் கட்லெட் செய்யலாமா?
Kathal Cutlet

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com