சுட்ட கத்திரிக்காய் ஸ்பெஷல் ரெசிபி!

Eggplant Special Recipe
Eggplant Special Recipe

ளிதாகக் கிடைக்கும் எதன் அருமையையும் நாம் புரிந்து கொள்ள மாட்டோம்.  விழாக்கள், திருமணங்களில் அதிகம் பயன்படுத்தும் கத்திரிக்காயை அலட்சியமாக எண்ணுவோம். ஆனால் அது செய்யும் உடல் நலனுக்கான மாயங்களை தெரிந்து கொண்டால் நிச்சயமாக வாரம் நான்கு முறையாவது நம் வீட்டு சமையலில் இடம் பிடிக்கும்.

கத்திரிக்காய் உடல்நலத்துக்குத் தேவையான பல சத்துக்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி வைட்டமின் ஈ சத்துக்கள், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன. உடலின் எலும்பு வளர்ச்சி, எலும்பு வலிமை, இதயம், ரத்த நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்த உடலின் நலனுக்கும் கத்திரிக்காய் உதவுகிறது. இது அம்மை நோய்க்கு தடுப்பு உணவாகவும் செயல்படுகிறது.   நீரிழிவை  கட்டுப் படுத்தவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

அந்தக் காலத்தில் அம்மை நோய் வந்தால் கத்திரிக்காயை அடுப்பில் சுட வைத்து இந்த ரெசிபியை பாட்டிகள் நிச்சயம் செய்து தருவார்கள். இந்த சுட்ட கத்திரிக்காய் ரெசிபி செய்முறை குறித்து பார்க்கலாம். சத்தான உணவு கத்தரிக்காய் அதை சுட்டு பிசைந்து பருப்பு சாதம் மற்றும் தோசை உடன் பரிமாறலாம்.

தேவையான பொருட்கள்:
குண்டு கத்தரிக்காய் - 4 (பெரியதாக)
பெரிய வெங்காயம் 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 ( நறுக்கியது)
பச்சைமிளகாய் - 4 (நறுக்கியது)
புளி கரைசல் (எலுமிச்சை அளவு) - 1 கப்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை -  சிறிது


செய்முறை:
த்தரிக்காய்களை நன்கு கழுவி ஈரம் போகத் துடைத்து மேலே விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி மிதமான நெருப்பில்  சுடவும். (மைகோதி போன்றவற்றில் குத்தியும் திருப்பலாம்) .பின்னர் கருகிய தோலை நீக்கி நீரில் கழுவி அதைப் பிளந்து அதன் உள்ளே புழு மற்றும் சொத்தை இருந்தால் நீக்கவும்.

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சப்போட்டா!
Eggplant Special Recipe

வெந்துள்ள கத்திரிக்காய்களை நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டும் வதங்கியதும் பிசைந்த கத்திரிக்காய் உடன் புளி கரைசல் ஊற்றி நன்கு கலந்து தேவையான உப்பு சேர்த்து இறக்கவும். இதை கொதிக்க வைக்கக் கூடாது.

அசத்தலான சுவையில் கத்தரிக்காய் சுட்டு பிசைந்த ஸ்பெஷல் ரெசிபி தயார். இதை சூடான சாதத்தில் போட்டு அல்லது தோசைக்குத் தொட்டுக் கொண்டால் தேவாம்ருதம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com