உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சப்போட்டா!

Sapota improves physical health!
Sapota improves physical health!

க்கள் விரும்பி உண்ணும் பழ வகைகளில் சப்போட்டாவும் ஒன்று. இதன் சுவை மற்ற பழங்களை விட வித்தியாசமாகவும் ருசியாகவும் இருக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த சப்போட்டா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சப்போட்டா பழத்தில் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் நமது எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும், இந்தப் பழத்தை சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் குறையும். சப்போட்டா பழத்தை கூழாக்கி அதில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து பருகினால் சளி தொந்தரவு குணமடையும் என்கின்றனர்.

முகத்தை பளபளப்பாக மாற்ற சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட வேண்டும். இதற்கு பித்தத்தைப் போக்கும் குணம் இருப்பதால், சப்போட்டா பழத்தை சாப்பிட பிறகு கொஞ்சம் சீரகத்தை மென்று விழுங்கினால் பித்த மயக்கத்திற்கு நல்ல மருந்தாக இருக்கும்.

சப்போட்டா பழத்தில் உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகியவை இயற்கையாகவே உண்டு. இது உடலுக்குத் தேவையான அதிக ஆற்றலைக் கொடுத்து நாள் முழுவதும் நம்மை சோர்வில்லாமல் பார்த்துக் கொள்ளும்.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்போட்டா ஜூஸ் மற்றும் நேந்திரம் பழம் சாப்பிட்டு வந்தால், அதன் தாக்கத்திலிருந்து விடுபடலாம். அதேபோல, மூலநோய் உள்ளவர்களுக்கும் சப்போட்டா பழம் இயற்கையான மருந்தாகும். சப்போட்டா பழ ஜூஸ் உடல் உஷ்ணத்தைக் குறைத்து தாகத்தையும் தணிக்க வல்லது.

உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால், கொழுப்பு பிரச்னைகள் நீங்கி, உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் உள்ள வைட்டமின்கள் நமது இரத்த நாளங்களை சீராக்கி கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.

சப்போட்டா பழத்துடன் திராட்சை, கொய்யாப்பழம் அத்துடன் கொஞ்சம் தேனையும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
Sapota improves physical health!

சப்போட்டா பழத்தில் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது என்பதால், இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், குடல் சார்ந்த பிரச்னைகள் நீங்கும்.

இப்படி பல எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ளன. எனவே, உங்களின் உடல்நலத்தை பேணிப் பாதுகாக்க தினசரி சப்போட்டா பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இது அதிக சர்க்கரை சத்து நிறைந்தது என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com