
இந்த சீசனில் சர்பத் ஜூஸ் என்று தயாரிப்போம். வழக்கமாக போடும் பொருள்போல காய்கறிகள் கொண்டும் சர்பத் தயாரிக்கலாம். காய்கறிகள் வேகவைத்த சாறுடன் தேன், நாட்டுச் சர்க்கரை, இஞ்சி சாறு கலந்து ஜில்லென்று பரிமாற காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் கூட குடித்து விடுவர்.
பானிபூரிகள் பாக்கெட்டில் உள்ளதை வாங்கி காரம், க்ரீன் சட்னிக்கு பதிலாக சர்க்கரை சிரப், தே துருவல், ஊறவைத்த பாதாம் சீவல் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சுவையாக இருக்கும்.
தீடீர் விருந்தாளிகள் வந்துவிட்டால் இளநீர் பாயசம், நுங்கு பாயஸம் தயாரித்து கொடுக்கலாம். இளநீர், இளநீர் வழுக்கை சேர்த்து மிக்ஸியில் வைப்பர் மோடில் அடித்து அதனுடன் கன்டன்ஸ்ட் மில்க், ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் பிஸ்தா கலந்து பௌலில் கூலாகவோ, சாதாரணமாகவோ பரிமாற சூப்பராக இருக்கும்.
நுங்கை சிறியதாக கட் பண்ணி கொண்டு அதனுடன் ஜெல்லி கிரிஸ்டலை காய்ச்சி ஆறவைத்து புட்டிங் மோல்டில் செட் செய்து குளிர வைத்து பரிமாற சுவையாக இருக்கும்.
கிர்ணிபழ ஸ்மூதி தயாரிக்கையில் அதனுடன் கொஞ்சம் தேன்,இஞ்சி சாறு ஒரு டீஸ்பூன் சேர்த்து ஐஸ்க்யூப்ஸ் போட்டு அடித்து நுரைக்க கிண்ணத்தில் ஊற்றி குளிரவைத்து பரிமாறவும் .
தயிர் சாதம் தயாரிக்கையில் அரிசிக்கு பதில் கம்பு,சிறுதானிய குருணை போட்டு பாலில் வேகவைத்து, சற்று ஆறியதும் உப்பு ,தயிர் ஊற்றி கலந்து வைக்கவும். பரிமாறும் முன் வெள்ளரி கீறியது,கடுகு தாளித்து தேவையெனில் மோர் விட்டு தளர கலந்து கருவேப்பிலை தொக்கு, வெந்தய மோர் மிளகாயுடன் சாப்பிட உடலையும், மனதையும் குளிர்விக்கும்.
ஊறுகாய், தொக்கு என செய்யும்போது அந்தந்த காயை அரிந்து போடுவது, வதக்கி போடுவது டன் காயின் ஜுஸையும் சேர்த்து தயாரிக்க சுவையாக இருக்கும்.
நார்த்தங்காய், கிடாரங்காய் இவற்றில் ஊறுகாய் போடுகையில் காயை ஆவியில் வேகவைத்து ஆறியதும் உப்பு, காரம், தாளிப்பு செய்ய ருசியாக இருக்கும்.
வத்தல் மாவில் பிரண்டையை சுத்தம் செய்து விட்டு அதன் சாறை சேர்க்க தனி சுவையோடு பொரிக்கையில் ருசியாக இருக்கும்.
அப்பள மாவில் பெருங்காயத்தூள் சேர்ப்பதை விட பெருங்காயம் ஊறிய தண்ணீரை ஊற்றி பிசைந்து தயாரிக்க சுவையாகஇருக்கும்.
ஃப்ரிட்ஜில் ஐஸ் வாட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் வைப்பதை விட பாத்திரத்தில் வைத்து டம்ளரில் குடிக்க கொடுக்கலாம்.
பயணத்தின்போது தண்ணீர் தேவை அதிகம் இருக்கும். இதை சமாளிக்க வாட்டர் கேன் பெரிதாக கையோடு கொண்டு செல்ல தண்ணீர் வாங்கும் செலவு மிச்சமாகும்.
கோடையில் ஏற்படும் நாவறட்சி தாகம் வியர்வை வியர்க்குரு போன்ற பிரச்னைகளை மோர் அல்லது எலுமிச்சை போக்குகிறது.