
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தேங்காய் துருவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்.
கறிவேப்பிலை - சிறிது
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்.
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். இட்லி மாவில் உப்பு சேர்த்து வதக்கியதைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளி போட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கினால் சுவையான
மொறு மொறு இட்லி மாவு போண்டா ரெடி. மாலை நேர அவசரத்திற்கு உடனே செய்யலாம். வீட்டில் டிரை செய்து பாருங்கள்.
பால் பவுடர் ஸ்வீட்
தேவையான பொருட்கள்:
பால்பவுடர் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 5
புட்கலர் - சிறிது
ஏலத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
கடாயில் சர்க்கரை மூழ்கும் வரை சிறிது தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் பால்பவுடரை சிறிது சிறிதாக சேர்த்து நெய் விட்டு கட்டியில்லாமல் நன்கு கிளறவும். சிறிது புட்கலரை கலந்து கிளறி ஏலத்தூள் கலந்து பதம் வந்ததும் நெய் தடவிய டிரேயில் கொட்டி அதில் வறுத்த முந்திரியை பரப்பி சேர்த்து டைமன், சதுரம் சேப்பில் கத்தியால் போடவும்.
ஆறியதும் சதுரமாக உள்ளதை பிளேட்டில் எடுத்து வைக்கவும். சுலபமான சுவையான பால் பவுடர் ஸ்வீட் ரெடி. வாயில் போட்டாலே கரையும் இந்த ஸ்வீட் வீட்டில் டிரை பண்ணிப் பாருங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.