ஈவினிங் ஸ்நாக்ஸ்: ருசியைக் கூட்டும் வித்தியாசமான கொழுக்கட்டைகள்!

Different Kozhukkattai recipes...
Evening snacksImage credit - pixabay
Published on

வியில் வேகவைத்த எந்த உணவுமே உடலுக்கு மிகவும் நல்லது. எளிதில் ஜீரணமாகும். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எந்த நேரத்திற்கும் சாப்பிட ஏற்ற டிபன் இது. 

உண்டிலி இனிப்பு கொழுக்கட்டை:

அரிசி மாவு ஒரு கப் 

தேங்காய் துருவல் அரை கப் 

வெல்லம் (அ) கருப்பட்டி 1/2 கப் 

ஏலக்காய் 2  

முந்திரித் துண்டுகள் 

பொடித்தது.            ‌‌‌‌.       2 ஸ்பூன்

பால் அரை லிட்டர் 

உப்பு ஒரு சிட்டிகை  

நெய் 1 ஸ்பூன்

அரிசி மாவில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக விட்டு எடுத்து வைக்கவும். தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்து அரை லிட்டர் பாலில் கலந்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அவ்வப்பொழுது கரண்டியால் கிளறிவிட்டு பால் கலவை பாதியாக குறுகியதும் இறக்கி பொடித்த முந்திரி துண்டுகளை சேர்த்து சூடாகவோ குளிர வைத்தோ பரிமாற ருசி அபாரமாக இருக்கும்.

புதினா மல்லி ஸ்பைசி கார பிடி கொழுக்கட்டை:

பச்சரிசி மாவு ஒரு கப் 

புதினா கால் கப் 

கொத்தமல்லி, கால் கப் 

இஞ்சி ஒரு துண்டு 

பச்சை மிளகாய் 2 

தேங்காய்த் துருவல் 1/2 கப் 

எலுமிச்சம் பழச்சாறு 2 ஸ்பூன் 

உப்பு தேவையானது

இதையும் படியுங்கள்:
வெற்றியின் சூத்திரம் இந்தப் பத்து கட்டளைகள்!
Different Kozhukkattai recipes...

புதினா, கொத்தமல்லி, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் ரெண்டு கப் தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்த மசாலாக்களை சேர்த்து கொழுக்கட்டைக்கு தேவையான உப்பும் சேர்த்து பச்சரிசி மாவை தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். இறக்கி எலுமிச்சம் பழச்சாறு கலந்து சிறிது ஆற விடவும்.

கையில் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தொட்டுக் கொண்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கையால் பிடித்து வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்க மிகவும் ருசியான, மணமான கொழுக்கட்டை தயார். 

பசியைத் தூண்டும், பித்தத்தை போக்கும். அனைவரும் விரும்பும் இந்த கொழுக்கட்டைகளை மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com