வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் கீழ்க்கண்ட பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் நிச்சயம் வாழ்க்கையில் உயருவார்கள்.
1. எப்பொழுதும் முகத்தில் ஒரு புன்னகையோடு இருங்கள். புன்னகையுடன் இருப்பவரை அனைவரும் விரும்புவார்கள். அதுவே நமது வெற்றிக்கு ஆணிவேர்.
2. மற்றவர்களைப் பாராட்டப் பழகிக்கொள்ளுங்கள். பாராட்டிற்கு மயங்காதவர்கள் உலகில் யாரும் கிடையாது. நீங்கள் சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் ஏதேனும் நல்ல விஷயம் நிச்சயம் இருக்கும்.
3. மற்றவர்கள் பேசுவதை அக்கறையோடு கேளுங்கள். அப்படியா... என்று ஆர்வத்துடன் தலையசைத்துப் பாருங்கள். அவர்களுக்கு தனி உற்சாகம் ஏற்பட்டு, உங்கள் மீது அன்பைப் பொழிவார்கள்.
4. நம்முடன் பேசுபவர்களின் மனோபாவத்தைப் புரிந்து கொண்டு, அவர்களுடன் ஒன்றிவிடுங்கள். உங்கள் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களின் மதிப்பே உயர்ந்துவிடும்.
5. மேலதிகாரிகள், முதலாளிகளிடம் பேசும்போது கவனமாக இருங்கள். அவர்கள் பேசுவது தவறாக இருந்தாலும் தெரிவிக்காதீர்கள். அது உங்கள் நன்மதிப்பைக் குறைக்கும். பின் தவறை உணர்ந்து அவரே உங்களிடம் வருத்தம் தெரிவிப்பார்.
6. நண்பர்களைச் சந்திக்கும்போது கண்டிப்பாக நலம் விசாரியுங்கள். குடும்பத்தினரை விசாரியுங்கள். உங்கள் பந்தா, படாடோபங்களைக் காட்டாதீர்கள்.
7. ஒருவர் உங்களுக்குக் கை கூப்பி வணக்கம் சொன்னால் நீங்களும் கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள். அவர்களை அலட்சியப்படுத்தாதீர்கள்.
8. உறவினர்களுக்குக் கூடுமானவரை உதவிகளை செய்யுங்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
9. மற்றவர்களைக் குறை கூறியே பேசாதீர்கள். அதுபோல் அவர்களையும் குறை கூறிப் பேசுவதாக எண்ணுவார்கள். உங்களுக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.
10. மற்றவர்களைப் புரிந்து கொண்டு ஆறுதலாகப் பேசுங்கள். யாரிடம் பேசினாலும் கடைசியில் 'நன்றி' சொல்லி விடை பெறுங்கள்.