கோதுமை எல்லோருக்கும் தெரியும். ஆரோக்கியம் மிகுந்த மரக்கோதுமை பற்றித் தெரியுமா?

மரக்கோதுமை...
மரக்கோதுமை...

ரக்கோதுமையை பாப்பரை என்றும், இதை ஆங்கிலத்தில் buck wheat என்று கூறுவார்கள். கம்பு வரகு கோதுமை போன்று  இதுவும் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதில் புரதம், கால்சியம், இரும்பு, மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  இதை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. 100கிராம் மரக்கோதுமையில் 9.75 கிராம் தண்ணீர் அடங்கியுள்ளது. இதோ இதன் நன்மைகள்.

இதய நோய் தடுப்பு

இந்த உணவை சேர்ப்பதால்  இதய சம்பந்தப்பட்ட நோயான  இதய அழற்சி,மற்றும் இதய அடைப்பு  போன்ற பிரச்னைகள் வராமல்  தடுக்கிறது. அது மட்டுமல்ல, இது கெட்ட கொலஸ்டிரால் உருவாவதைத் தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துகிறது.  நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. 

மரகோதுமையில் அதிக அளவு புரதச் சத்து மற்றும் நார்சத்து  இருப்பதால் இதை நீங்கள் உணவில் சேர்த்துச் சாப்பிடும் போது  இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை அகற்றுகிறது. அதனால் உடல் எடை குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.

அஜீரண கோளாறுகளை தடுக்க

இதில் உள்ள நார்சத்து அஜீரண கோளாறுகளைத் தடுக்கிறது. இதன் மூலம் மலச்சிக்கலை  தடுத்து மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. 

குடல் பாதுகாப்பு

இது குடலை பாதுகாப்பாக வைக்கிறது. வயிற்று புற்று நோய்  மற்றும் குடல் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. குடல் சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் காக்கிறது.

சர்க்கரை நோய் கட்டுப்படுத்த

அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளதால் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் இதை உண்பது மிகச் சிறந்தது.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய்Image credit - isha.sadhguru.org

அனீமியா வராமல் தடுக்கிறது

இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த சிவப்பணுக்கள்  உருவாவதற்கு மிக அவசியமாகும். இதன் இரும்புச் சத்து  ரத்த சோகையை போக்குகிறது. 

பித்தப்பை கற்களை தடுக்கிறது

மரக்கோதுமையில்  கரையாத நார்சத்து கணிசமான அளவு இருப்பதால்  பித்தப்பை கற்களை உருவாகாமல்  தடுக்கிறது.

மரக்கோதுமை செலியாக் நோயால் பாதிக்கப் பட்டவர் களுக்கு  சிறந்த உணவு.

மரக்கோதுமையில் குறிப்பிட்ட அளவு கால்சியம் உள்ளதால். ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அந்த 63 நாட்கள்!
மரக்கோதுமை...

வட இந்தியாவில்  பெரும்பாலும் நவராத்திரி காலங்களில் இந்த மரக்கோதுமை மாவு பயன்படுத்தி சப்பாத்தி போன்ற உணவுகள் தயாரிக்கிறார்கள்.

இதன் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் முடியை நன்கு வளரச் செய்கிறது. இதை உட்கொள்வதன் மூலம்  தோல் சுருக்கம் தடுக்கப்படும். 

இந்த மரக்கோதுமை விதைகளை கஞ்சி செய்தும் சாப்பிடலாம். எளிதில் ஜீரணமாகக் கூடிய தாவர புரதம் உள்ளதால் தசைகளை வலுவாக்கும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com