அனைவரும் விரும்பும் தீபாவளி பதார்த்தங்கள்!

Everyone's Favorite Diwali Foods!
Deepavali pakshanangal...Image credit - youtube.com
Published on

தேன் குழல்

து ஒரு பாரம்பரிய பிரபலமான தென்னிந்திய உணவு ஆகும்.

தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு – ¼ கப், சர்க்கரை – 1½ கப், தேன் – ¼ கப், ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையானது.

செய்முறை: முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம்பருப்பை தனித்தனியாக சிறிது வறுத்து, மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, இதை சிறிது மெலிதான வடிவில் குழல்போல் சுருட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, செய்த குழல்களைப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சி எடுக்கவும். பாகு காயும்போது அதில் தேன் மற்றும் ஏலக்காய் பொடியைச் சேர்க்கவும். பொரித்தக் குழல்களை இந்தப் பாகில் அமுக்கி வைத்து, பாகு நன்றாக உள்ளே செல்லும்படி அதை அடிக்கடி நன்கு பிரட்டி விடவும். இது தூய்மையான தேன் மணத்துடன் மொறுமொறுப்பாக இருக்கும்.

பாம்பே காஜா

தேவையான பொருட்கள்: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை  - 200 கிராம், ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன், எண்ணெய் – ¼ லிட்டர், தேங்காய் துருவல் - 2 ஸ்பூன், உப்பு - 1 பிஞ்ச், கேசரி கலர் பவுடர் – சிறிதளவு.

செய்முறை:  மைதா உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவுபோல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம்போல் இடவும். இதை பாதியாக மடித்து,  மீண்டும் அதை பாதியாக மடித்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பின்னர் சர்க்கரையில் சிறிது நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரிக்கலர், ஏலக்காய் தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து கலர் பொடி தேங்காய் துருவல் தூவவும்.

நவதானிய அப்பம்

தேவையான பொருட்கள்: நவதானிய மாவு -1 கப், ரவை - 1 கப், பாதாம் மிக்ஸ் - 2 ஸ்பூன், பால் - 1 கப், சர்க்கரை - 1 கப், பழுத்த பழம் – 1, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து அத்துடன் பாதாம் மிக்ஸ் பவுடரை சேர்த்து, பின் பழத்தை மசித்து போட்டு, நன்கு கலக்கி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஆப்பச் சட்டியில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி சின்ன சின்ன அப்பளங்களாக சுட்டு எடுத்து மேலே சிறிதளவு சர்க்கரையைத் தூவி பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
வெஜ் ஸ்டஃப்டு யம்மி பப்ஸ்!
Everyone's Favorite Diwali Foods!

மகிழம்பூ முறுக்கு

தேவையான பொருட்கள்: பச்சரிசி (தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் -  ¼ லிட்டர், பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன், காய்ச்சிய எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை:  பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக சிவக்க வறுத்து ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் முறுக்கிப் பிழியவும். சிவந்த பின் மறுபக்கம் திருப்பி போட்டு, சிவந்ததும் எடுக்கவும். மொறுமொறுப்புடன் கூடிய சுவையான மகிழம்பூ முறுக்கு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com