தேவையான பொருட்கள்
வல்லாரை இலை - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
புளி - சிறிது
உப்பு -தேவைக்கு
சின்ன வெங்காயம் - ஐந்து
தேங்காய் துருவல் - நாலு ஸ்பூன்
பெருங்காய பொடி - அரை டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -ரெண்டு டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு சீரகம், பெருங்காயம் போட்டு வறுக்கவும். பின்பு சின்ன வெங்காயம், கழுவிய வல்லாரை கீரையை தனித்தனியாக வதக்கவும். ஆறியபின், மிக்ஸியில் உப்பு, புளி, வறுத்த பொருட்களுடன் தேங்காய் துருவல் சேர்த்து துவையலாக அரைக்கவும். சுவையான வல்லாரை கீரை துவையல் ரெடி.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் . வல்லாரை குழந்தைங்களுக்கு மூளைக்கு பலம் கொடுக்கும். நினைவாற்றைலை அதிகரிக்கச் செய்யும்.
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி கீரை - ஒரு கப்
அரிசி கழுவிய நீர் - இரண்டு கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு .
மஞ்சள் தூள் -சிட்டிகை
மிளகு, சீரகப்பொடி - அரை டீஸ்பூன் .
உப்பு -தேவைக்கு.
செய்முறை
அரிசி கழுவிய நீரில் சின்ன வெங்காயம், அரிந்த கீரை, மஞ்சள் தூள், உப்பு, மிளகு சீரகத்தூள் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். சத்தான சூடான மணத்தக்காளி கீரை சூப் ரெடிஅனைவரும் குடிக்கலாம். வாய்ப்புண்,வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை -ஒரு கப்
தோசை மாவு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - நாலு பல்
மிளகு -ரெண்டு ஸ்பூன்
சீரகம் -ஒரு ஸ்பூன்
இஞ்சி -சிறிது
பச்சை மிளகாய் - ரெண்டு
உப்பு -தேவைக்கு.
தாளிக்க எண்ணெய் - 1 ஸ்பூன், கடுகு - 1/2 ஸ்பூன், பெருங்காயப் பொடி - 1/4 ஸ்பூன்.
செய்முறை
முடக்கத்தான் கீரையை கழுவி மற்ற பொருட்களையும் சேர்த்து எண்ணெயில் வதக்கி ஆற வைத்து நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவில் கலந்து விட்டு கிளறி தாளிக்க வேண்டியதை தாளித்து போடவும்.
அடுப்பில் தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி விட்டு சுற்றி எண்ணெய விட்டு திருப்பி போட்டு வெந்ததும் தோசையாக எடுக்கவும். சத்தான முடக்கத்தான் கீரை தோசை ரெடி. இதற்கு சட்னி, சாம்பார், இட்லி பொடி தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும். வாய்வு, மூட்டுவலிக்கு சாப்பிட்டால் மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
மூக்கிரட்டை கீரை -ஒரு கப்
துவரம்பருப்பு -அரை கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் -பத்து
பச்சை மிளகாய் -ரெண்டு
தக்காளி -ரெண்டு
சாம்பார் தூள் - ரெண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் -ஒரு டீஸ்பூன்
மிளகு -ஒரு டீஸ்பூன்
சீரகம் -ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிட்டிகை
எண்ணெய் -தேவைக்கு.
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம் , பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின் சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். கழுவி வைத்த கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது தண்ணீர் எடுத்து கீரையில் ஊற்றி பச்சை வாசனை போனதும் கழுவி ஊறவைத்த துவரம் பருப்பு சேர்க்கவும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். நன்கு வெந்ததும் கொதிக்கும் போட மத்தால் நன்கு கடைந்து பெருங்காயத் தூள் தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சத்தான மூக்கிரட்டை கீரை கடைசல் ரெடி. இது கல்லீரல் பிரச்சனை மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
துத்திக் கீரை- ஒரு கப்
காய்ந்த மிளகாய் -இரண்டு
சாம்பார் பொடி - ஒரு ஸ்பூன்
புளி - சிறிது
பெரிய தக்காளி -ஒன்று
உப்பு -தேவைக்கு
சின்ன வெங்காயம் -எட்டு
வெந்த பாசிப்பருப்பு - 1/4 கப்
தாளிக்க
கடுகு -அரை ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
எண்ணெய் -இரண்டு ஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக அரந்த துத்திக்கீரை, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி நீர் ஊற்றி வேக விடவும். வெந்ததும் சாம்பார் பொடி கரைத்த புளி சேர்த்து கொதிக்க விட்டு, தேங்காய் துருவல் அரைத்து, வெந்த பருப்புடன் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும் தாளிக்க கொடுத்த பொருளை தாளித்து போடவும். சத்தான துத்திக்கீரை கூட்டு ரெடி. சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். இது சுகருக்கும், மூலத்துக்கும் நல்லது. இந்த அத்தனை சத்தான கீரைகளையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறலாம்.