
அழகை மெருகூட்டுவதில் சந்தனமும் மஞ்சளும் முக்கிய பங்கு ஆற்றுகிறது. இயற்கையான மஞ்சள் சந்தன பேக்குகளைப் பற்றிப் பார்ப்போம்.
மஞ்சள், சந்தனம் மற்றும் ஆலோவேரா பேக்
சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கச் சிறந்தது. ஆலோவேரா அழற்சியைப் போக்கி முகப்பருவைத் தடுக்கும். சந்தனம் நல்ல மணம் தரும். மஞ்சளிலும் அழற்சி எதிர்ப்பு உள்ளது. அழற்சியைக் குறைத்து முகத்தை நன்கு பொலிவாக வைக்கக் கூடியது.
பளபளப்பான சருமத்திற்கு மஞ்சள், சந்தனம் மற்றும் பால் நல்ல மென்மையான இந்த பேஸ்ட் தயாரிக்க காய்ச்சாத பால் பயன்படுத்தவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ முகம் பளிச்சென்று ஆகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இந்த பேக் மிகச் சிறந்தது.
மஞ்சள், சந்தனம் மற்றும் யோக்ஹர்ட்
முகக் கருமையையும் பிக்மெண்டேஷனையும் இந்த பேக் தடுக்கக் கூடியது. இரண்டு டீஸ்பூன் யோக்ஹர்ட் மற்றும் சந்தனம், மஞ்சளையும் கலந்து இந்த பேஸ்டை முகத்தில் தடவி 20நிமிடம் வைக்கவும். முகக்கருமை மற்றும் சருமத்தின் தன்மையை மேம்படுத்தி மென்மையாக்கும் இந்த பேஸ்ட்.
முகத்தை இறுக்கமாக்க மஞ்சள்,சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர்
மஞ்சள் சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவவும். இது நன்கு காய்ந்த பிறகு முகத்தைத் கழுவ முகம் பொலிவாவதுடன் இறுக்கமாக இருக்கும். வாரத்தில் இருமுறை இதை பயன்படுத்தவும்.
மஞ்சள், சந்தனம் மற்றும் தேன்
உங்கள் முகம் மிக வறண்டு உள்ளதா? கவலையே வேண்டாம். ஒரு டீஸ்பூன் தேனோடு மஞ்சள், சந்தனம் சேர்த்து முகத்தில் தடவவும். தேன் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சியைத் தரும். மஞ்சள் அழற்சியைப் போக்கி முகத்தை மென்மையாக்கும். உங்கள் முகம் பிரகாசமாவதுடன் மென்மையாகவும் இருக்கும்.
கவனிக்க வேண்டியவை
சுத்தமான ஆர்கானிக் மஞ்சளை பயன்படுத்தவும்.
முதலில் சந்தனத்தை கையில் தடவி பரிசோதனை செய்யுங்கள் சருமத்திற்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் பயன்படுத்தவும்
மேற்கூறிய பேக்குகளை பயன்படுத்தும்போது சோப் உபயோகிக்க வேண்டாம்.
மேற்கூறிய பேக்குகளை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தவும். எந்தவித பிறகு விளைவுகளைய்ம் ஏற்படுத்தாத இயற்கை பேக்குகளால் நன்மை பெறவும்.