நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் பல வகையான காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
அவற்றைப் போலவே சில வகையான பூக்களையும் அப்படியே உண்பதாலும் அல்லது உணவுகளில் சேர்த்து சமைத்து உண்ணும்போதும் பல வகையான சத்துக்கள் நம் உடலுக்குக் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறான பூக்களில் 7 வகை பற்றியும் அவற்றிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.
இது எல்லா காலமும் கிடைக்கக் கூடியதொரு மூலிகைப் பூ. இதை 'மம்' என்றும் அழைப்பதுண்டு. பல காலமாக இது தலைவலி, தூக்கமின்மை, தசை மற்றும் எலும்புக்கூடு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஆகிய நோய்களுக்கு நிவாரணமளிக்கும் பொருளாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உடலை தளர்வுறச் செய்து உடலுக்கும் மனதிற்கும் அமைதி தரக்கூடிய இதன் குணம் பழங் காலத்திலிருந்தே பிரசித்தி பெற்றது. இப் பூவில் உள்ள அந்தோசியானின் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் வீக்கங்களைக் குறைத்து ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவி புரிபவை.
செம்பருத்தி என தமிழில் அழைக்கப்படும் இந்தப் பூவை செடியிலிருந்து பறித்து அப்படியே உண்ணலாம். மேலும் இப் பூவிலிருந்து டீ மற்றும் ஜாம் தயாரித்தும் உண்ணலாம். ஹைபிஸ்கஸ் டீ பல வகை மருத்துவ குணங்கள் உடையதாகக் கருதப்பட்டு பலராலும் அருந்தப்பட்டு வருகிறது. இந்தப் பூ சாலட்களிலும், மேலும் பல உணவுகளில் சுவையூட்டியாகவும் சேர்க்கப்பட்டு, உட்கொள்ளப்பட்டு வருகிறது. ஹைபிஸ்கஸ் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகளவு கொழுப்பின் அளவை குறைக்க உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ரோஸ் இதழ்களை அப்படியேயும் சாப்பிடலாம். ஜூஸ், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்தும் உண்ணலாம். உண்ணத் தகுதியான ரோஸ் இதழ்கள் மன அழுத்தத்தையும் வருத்தங்களையும் குறைக்க வல்லவை.
இதன் சுகந்தமான மணமும் கவர்ச்சியான நிறமும், பேக்ட் (baked) உணவுகள், இன்ஃப்யூஸ்ட் (infused) சிரப், ஹெர்பல் டீ மற்றும் சீசனிங் (seasoning) போன்றவற்றில் இந்த மூலிகைப் பூவை ஒரு கூட்டுப்பொருளாகச் சேர்க்கத் தூண்டுகின்றன.
இந்த மூலிகையை நீண்ட நாள் வைத்துப் பயன்படுத்தலாம். இதை டீ தயாரிக்கவும், உணவுக்கு சுவை கூட்டவும் உபயோகிக்கலாம். பல காலமாகவே இது கீல் வாதம், வீக்கம், வயிற்றுப் போக்கு மற்றும் அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் கவனக்குறைவை போக்கவும் இது உதவி புரியும்.
இந்தப் பூவை அப்படியே உண்ணலாம். சாலட்டிலும் சேர்க்கலாம். சப்பாத்தி மாவுடன் சேர்த்துப் பிசைந்து சுட்டு சாப்பிடலாம். ஜெல்லி மற்றும் ஒயின் (wine) தயாரிப்பிலும் கூட்டுப்பொருளாகச் சேர்க்கலாம்.
ஆயிரம் ஆண்டுகளாகவே இதன் பூ மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைகளையும் பூக்களையும் பொதுவாக உலர வைத்தே உபயோகிக்கின்றனர். இந்தப் பூக்களை சமையலில் சேர்க்கும்போது உணவுக்கு ஒரு தனித்துவமான மணமும் சிறிதளவு இனிப்பு சுவையும் கிடைக்கும். கெமோமைல் டீ அருந்திவிட்டு படுக்கச் சென்றால் அமைதியான தூக்கம் பெறலாம்.
நாமும் இம் மலர்களின் பயன்பாட்டை அறிவோம். பலன் பல பெறுவோம்.