
இன்றைய அவசர உலகில் நமது வேலையை எளிமையாக மாற்றுவது புதுவிதமான சாதனங்கள்தான். அதிலும் சமையலுக்கு குக்கர் இல்லையேல் சமையலே இல்லை என்ற அளவிற்கு குக்கர் இன்றையமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. ஆனால் சில உணவுகளை குக்கரில் சமைக்கும்போது அது உடலுக்கு ஆரோக்கிய கேடு உண்டாக்கி செரிமானத்தை பாதிக்கிறது. அந்த வகையில் குக்கரில் சமைக்க கூடாத உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
அரிசி
பெரும்பாலானவர்கள் காலை நேர அவசர சமையலுக்கு அரிசியில் சாதம் சமைக்க குக்கரையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒருபோதும் பிரஷர் குக்கரில் அரிசியை சமைக்கக் கூடாது. ஏனென்றால் அரிசியில் உள்ள ஸ்டார்ச் அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் குக்கரில் அரிசி சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள்
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள காய்கறிகளில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.ஆனால் காய்கறிகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது, அவற்றின் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இழக்கப்படுவதால் காய்கறிகளை குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.காய்கறிகள் மற்றும் இலை கீரைகளை ஒரு பானை அல்லது வாணலியில் சமைப்பதுதான் சிறந்தது.
பாஸ்தா
சமைக்கும்போது அதிக ஸ்டார்ச்சை வெளியிடும் ஒரு உணவாக பாஸ்தா இருக்கிறது. எனவே, இதை ஒருபோதும் குக்கரில் சமைக்க வேண்டாம். ஒரு பாத்திரத்தில் சமைத்த பிறகு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
மீன்
எளிதாக சமைக்கும் உணவாக மீன் இருக்கிறது . இது தவிர சீக்கிரமே மீன் வெந்துவிடும் ஒருபோதும் பிரஷர் குக்கரில் மீனை சமைக்க வேண்டாம். அப்படிச் செய்தால், மீன் வெந்து உடைந்துவிடும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு அதிக ஸ்டார்ச் கொண்ட காய்கறியாக இருப்பதால் அதை குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதல்ல. மேலும் அதை குக்கரில் சமைக்க விரும்பினால், அதை நிறைய தண்ணீரில் சமைத்து பின்னர் பயன்படுத்துவதுதான் சிறந்தது..
மேற்கூறிய அரிசி, உருளைக்கிழங்கு, பாஸ்தா, மீன், காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை குக்கரில் சமைக்காமல் பாத்திரத்தில் சமைத்து உடல் நலத்தை பேணுவதே சாலச் சிறந்தது.